Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஆக்ரோஷமாக காத்திருந்த இளைஞர்.. ரயிலில் வந்திறங்கிய இருவர்.. அடுத்து நடந்த பகீர் சம்பவம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 28, 2025
in அரசியல் செய்திகள்
0
ஆக்ரோஷமாக காத்திருந்த இளைஞர்.. ரயிலில் வந்திறங்கிய இருவர்.. அடுத்து நடந்த பகீர் சம்பவம்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 27, 2025 8:12 AM IST

டெல்லியில் படித்து வந்த அந்த சிறுமி டெல்லிக்கு செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். ரயில்வே பிளாட்பாரத்தின் படிக்கட்டுகளில் இறங்கி வந்து கொண்டிருந்த சிறுமியையும், அவரது தந்தையையும் இளைஞர் ஒருவர் வழிமறித்துள்ளார்.

News18News18
News18

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் ரயில் நிலையத்தில் வைத்து இளைஞர் ஒருவர் 16 வயது சிறுமியையும், அவரது தந்தையையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திடுக்கிடும் சம்பவத்தின் பின்னணி என்ன?

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஆரா ரயில் நிலையத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 16 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் வந்துள்ளார். டெல்லியில் படித்து வந்த அந்த சிறுமி டெல்லிக்கு செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். ரயில்வே பிளாட்பாரத்தின் படிக்கட்டுகளில் இறங்கி வந்து கொண்டிருந்த சிறுமியையும், அவரது தந்தையையும் இளைஞர் ஒருவர் வழிமறித்துள்ளார்.

ஆக்ரோஷமாக காணப்பட்ட அந்த இளைஞர் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. மூவரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த நிலையில், ஆவேசமடைந்த அந்த இளைஞர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து அந்த பெண்ணின் தலையிலேயே சுட்டுள்ளார். நெற்றிப் பொட்டை துப்பாக்கித் தோட்டா துளைத்த நிலையில் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

இதைப் பார்த்து அதிர்ந்து போன சிறுமியின் தந்தை இளைஞர் மீது பாய்ந்து அவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் அந்த இளைஞர். சத்தம் கேட்டு ரயில்வே போலீசார் மற்றும், பயணிகள் அப்பகுதிக்கு ஓடி வருவதற்குள் அந்த இளைஞர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Also Read | மம்மூட்டி மன்னிப்பு கேட்க வேண்டுமா.. கேரளத்தில் எழுந்த சர்ச்சை என்ன? – மோகன்லால் பதில் இதுதான்!

துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர் 20 வயதான அமன் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த சிறுமி 16 வயதான ஜியா குமாரி என்றும், அவரது தந்தையின் பெயர் அனில் குமார் சின்ஹா என்றும் தெரிவந்துள்ளது. ரயில் நிலையத்தில் நடைமேடைக்கு செல்லும் ஓர் பிரிட்ஜ் நடைபாலத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தனது காதலை ஏற்காததால் இளைஞர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில் நிலையத்தில் அரங்கேறிய இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Location :

Bihar Sharif,Nalanda,Bihar

First Published :

March 27, 2025 8:12 AM IST



.

Previous Post

Trichy Weather 27 March 2025: திருச்சி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 24.89°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Next Post

Tirunelveli Weather 27 March 2025: திருநெல்வேலி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 26.88°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tirunelveli Weather 13 February 2025:  நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 22.92°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Tirunelveli Weather 27 March 2025: திருநெல்வேலி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 26.88°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In