திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏ பி முருகானந்தம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தேர்தல் கண்காணிப்பு நிலை குழுவினரை பகிரங்கமாக மிரட்டி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றிருந்த சிறப்பு காவல் ஆய்வாளர் புகழேந்தி என்பவரிடம் பாஜக வேட்பாளர் முருகானந்தம் “உங்க பேர் என்ன? திமுகவில் எங்களை மிரட்ட சொல்லி சொன்னாங்களா? உங்க ஐடி கார்டு எங்க? மரியாதையா பேசி பழகுங்க..
வாழ்நாள் முழுக்க கோர்ட்டுக்கு அலைய வச்சிருவேன்.. என்ன சவுண்டு விடுறீங்க..” என பேசிக்கொண்டு இருக்கும் பதே மற்றொரு அதிகாரி அவரை சமாதானம் செய்ய முயன்ற போது “நான் உன்கிட்ட பேசறனா.. நான் இவர்கிட்ட பேசிட்டு இருக்கேன்..” என மற்றொரு அதிகாரியை அடிக்க பாய்வதுபோல காருக்குள்ளேயே எகிறினார் ஏ.பி முருகானந்தம். தேர்தல் கண்காணிப்புக்குழு அதிகாரிகளை மிரட்டும் தோனியில் பேசிய முருகானந்தத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு தொற்றிக் கொண்டது.


குப்பன் மீதும் சுப்பன் மீதும் நடவடிக்கை எடுக்கும் இந்த பறக்கும் படை அதிகாரிகள் ஏன் முருகானந்தம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. முருகானந்தத்திற்கு விழிப்புணர்வும் உள்ளது சட்டமும் தெரிந்து வைத்துள்ளார் அந்த நம்பிக்கையில் தான் தெளிவாக பேசுகிறார் பொதுமக்களும் இதுபோன்று தைரியமாக பேசவும் நடவடிக்கை எடுக்கவும் அதாவது தவறு செய்யும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் முன்வர வேண்டும் அப்பொழுதுதான் நடுத்தர மக்களும் ஏழை வரும் பாதுகாக்கப்படுவார்கள் பொது மக்களுக்கு உதவி செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் காத்துக் கொண்டிருக்கிறது என்னை பொருத்தவரை முருகானந்தம் பேசியது தவறு அல்ல அவர் பேசியதை நான் வரவேற்கிறேன்