இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாட்டில் ஜனநாயகம் மலரச்செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்திய கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்” எனக் கூறியிருக்கிறார்.
பிறகு தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “பிப்ரவரி 5-ம் தேதி நடக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார்” என தெரிவித்துள்ளார். இதனால் கதர்கள் அப்செட் ஆகியுள்ளார்கள்.

காங்கிரஸுக்கு மீண்டும் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி எப்படி திமுக பக்கம் சென்றது என்கிற கேள்விக்கு பதிலளித்து பேசிய விவரப்புள்ளிகள், “கடந்த முறை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிபெறுவதற்கு தி.மு.க அதிகம் உழைத்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கேட்ட இடங்களையும் கொடுத்தார்கள். இந்தமுறையும் ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸுக்கு கொடுப்பதற்கு தி.மு.க தயாராக இருந்தது. ஆனால் அந்த கட்சிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. நாம் ஏன் ஒவ்வொரு முறையும் செலவு செய்து வெற்றிபெற வைக்க வேண்டும் என தலைமைக்கு அழுத்தம் கொடுத்தனர்.
