தற்போது, அய்யனார் துணை தொடரில் இவர் நடித்துவரும் பாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இவரின் அழுத்தமான நடிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே, நடிகர் ஜெபின் ஜான் அவரது நீண்ட நாள் காதலி மீனுவை கடந்த 2023 ஆம் ஆண்டு உற்றார் உறவினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், ஜெபின் ஜான் – மீனு தம்பதியினருக்கு ஆண் குழந்தைப் பிறந்துள்ளதை அவர்கள் இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அறிவித்துள்ளனர்.
இவர்களுக்கு ரசிகர்கள், சின்ன திரை பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: மன உளைச்சலில் இருந்தால் என்ன செய்வது? த்ரிஷா பகிர்ந்த ரீல்ஸ்!
