வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கென முதல் துவக்க நாள் நிகழ்ச்சியாக பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்க உள்ளார். அயோத்தி வந்த பிரதமருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அவர் காரில் சாலை மார்க்கமாக பேரணியாக சென்று மக்களை சந்திக்கிறார். இவரை வரவேற்க ராமர் பக்தர்கள் , பொதுமக்கள் டன் கணக்கில் பூக்களை வாங்கி வைத்துள்ளனர். ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இங்கு வரும் பக்தர்கள் பலரும் மெகா சைஸ் நாமம் அணிந்து செல்வதை காண முடிகிறது.
அயோத்தியில் கட்டப்பட்டு உள்ள ராமர்கோயில் கும்பாபிஷகேம் வரும் ஜன. 22 ம் தேதி நடத்தப்படுகிறது. இதற்காக வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் ராமர் கோயில் கொண்டாட்டத்திற்கான பிரசாரத்தை மேற்கொள்வது என பா.ஜ., முடிவு செய்து உள்ளது.
மன்னர் வருகிறார்
இது குறித்து உள்ளூர் வாசி ஒருவர் கூறுகையில்: நாட்டின் மாண்புமிகு பிரதமர், அதாவது இந்தியாவின் மன்னர் அயோத்திக்கு வருகிறார், அவரை வரவேற்க, அயோத்தி மக்கள் மலர் தூவி மற்றும் மாலைகளை அணிவித்து அவரை வரவேற்கிறார்கள் என்றார்.
உணவு, குடிநீர் வசதி
ஏற்பாடுகள் குறித்து உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறுகையில் ; பக்தர்களுக்கு ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் கிடைக்கும் தரத்துடன் நல்ல உணவு மற்றும் குடிநீர், குளிர்பானம் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம். மிக மலிவான விலையில் கிடைக்க வேண்டும் என முதல்வர் யோகி உத்தரவிட்டுள்ளார். அதன்படி பக்தர்கள் ஸ்ரீ ராமரை தரிசனம் செய்ய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


