ராஜபாளையத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு சார்பில் தேசிய குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது. வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான சுமதி தலைமையில் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
பின்னர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்ட நீதிபதி சுமதி, விழிப்புணர்வு கையெழுத்து பதாகையில் கையொப்பமிட்டார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், வேர்ல்டு விஷன் இந்தியா நிர்வாகிகள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் விழிப்புணர்வு பதாகையில் கையொப்பமிட்டனர்.
நிறைவில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின பிரச்சார வாகனத்தையும் நீதிபதி சுமதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.


செய்தி – ஜெகதீஸ்வரி

