“மக்களின் உயிர் காத்து, அவர்களின் ஆயுளை நீட்டிக்கும் நவீன அறிவியல் மருத்துவத்தை நீர்த்துப் போகச் செய்கிற வகையில் Mixopathy (மிக்ஸோபதி), ஒருங்கிணைந்த மருத்துவம், Common Foundation Course, வேதகால மருத்துவம், ஆன்மீக மருத்துவம், சோதிட மருத்துவம் என்று போலி அறிவியலை திணிக்கும் முயற்சிகள் நடந்துகொண்டு வருகிறது” சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் 4வது மாநில மாநாட்டில் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கூறினார்.

