Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

எங்கே காங்கிரஸ் ஆட்சி இருக்கிறதோ, அங்கு பயங்கரவாதம், அட்டூழியங்கள் எல்லாம் கட்டுக்கடங்காமல் இருக்கின்றன..! – பிரதமர் மோடி.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 18, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
எங்கே காங்கிரஸ் ஆட்சி இருக்கிறதோ, அங்கு பயங்கரவாதம், அட்டூழியங்கள் எல்லாம் கட்டுக்கடங்காமல் இருக்கின்றன..! – பிரதமர் மோடி.
6
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஜெய்ப்பூர்: எங்கே காங்கிரஸ் ஆட்சி இருக்கிறதோ, அங்கு பயங்கரவாதம், அட்டூழியங்கள் எல்லாம் கட்டுக்கடங்காமல் இருக்கின்றன என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ராஜஸ்தானில் இன்னும் சரியாக ஒரு வாரத்தில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. ராஜஸ்தானை நாட்டின் முன்னணி மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே பாஜ.,வின் நோக்கம்.

ராஜஸ்தானில் நமது சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே நோக்கமாக பாஜ.,கொண்டுள்ளது. பாஜ., அளித்த வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். எங்கே காங்கிரஸ் ஆட்சி இருக்கிறதோ, அங்கு பயங்கரவாதம், அட்டூழியங்கள் எல்லாம் கட்டுக்கடங்காமல் இருக்கின்றன.

பெண்கள் போலியான பலாத்கார வழக்குகளை பதிவு செய்கிறார்கள் என்று முதல்வர் கெலாட் கூறுகிறார். இப்படிப்பட்ட வெறுப்புக் கட்சியை பெண்கள் தண்டிக்க வேண்டும். ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. ஒருபுறம், உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது. மறுபுறம், கடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தானில் என்ன நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

கலவரம், கல் வீச்சு,

ஒவ்வொரு குடிமகனின் உயிரையும் உடைமையையும் பாதுகாப்பது அரசின் கடமை. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மீதான குற்றங்களும், வன்கொடுமைகளும் அதிகரித்துள்ளன. ஹோலியோ, ராமநவமியோ, ஹனுமன் ஜெயந்தியோ என எந்த ஒரு பண்டிகையையும் மக்கள் ராஜஸ்தானில் அமைதியாக கொண்டாட முடியாது.

கலவரம், கல் வீச்சு, ஊரடங்கு உத்தரவு, இதெல்லாம் தொடர்ந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் தலித்துகளுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகள் பற்றிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ் இயல்பிலேயே தலித்துகளுக்கு எதிரானது. ஒரு தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் உயர் பதவிக்கு வருவதை காங்கிரஸ் விரும்புவதில்லை. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

.

Previous Post

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற என்னென்ன பண்றாங்க பாருங்க..!

Next Post

உலகக் கோப்பை இறுதிப் போட்டியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உலகக் கோப்பை இறுதிப் போட்டியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்!

உலகக் கோப்பை இறுதிப் போட்டியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In