இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்ற நிலையில், ஆளும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
அதிபா் அநுரகுமார திசாநாயகவின் ஜாதிக ஜன பலவேகய கட்சி காலை 8 மணி நிலவரப்படி 52 இடங்களிலும், எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா 13 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் ஜாதிக ஜன பலவேகய கட்சி 61.9 சதவிகிதமும், சமகி ஜன பலவேகயா கட்சி 18.49 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.