Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

45 வயதில் கடும் போட்டி! தீபக் மனைவியை பாராட்டிய முத்துக்குமரன்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 22, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
45 வயதில் கடும் போட்டி! தீபக் மனைவியை பாராட்டிய முத்துக்குமரன்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகு முதல்முறையாக தீபக் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துள்ளார் முத்துக்குமரன். இது குறித்து விடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றிக் கோப்பையை முத்துக்குமரன் வென்றார். முத்துக்குமரன் பிக் பாஸ் வெற்றியாளராக வேண்டும் என்பதில் மிகுந்த விருப்பம் கொண்டிருந்தவர்களில் முதன்மையானவர் தீபக்.

இருவரும் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் தன்னலமற்று உதவிக்கொண்ட விதம் பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பிக் பாஸ் வீட்டில் அண்ணன் – தம்பியாக இருந்த இவர்கள், பிக் பாஸ் வீட்டிற்கு வெளியேயும் தங்கள் உறவைத் தொடர்கின்றனர்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜன. 19) நிறைவு பெற்றது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அக்டோபர் 6 முதல் நடைபெற்றுவந்த இந்த நிகழ்ச்சி, 100 நாள்களைக் கடந்து 106 நாள்களுக்கு ஒளிபரப்பானது.

மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் பிக் பாஸ் சீசன் 8 வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வானார். அவருக்கு அடுத்தபடியாக நடிகை செளந்தர்யா தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் பிக் பாஸ் கோப்பையை வென்ற பிறகு முதல்முறையாக தீபக் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார் முத்துக்குமரன். அங்கு தீபக் குடும்பத்தினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது தீபக் மற்றும் அவரின் மனைவியுடன் முத்துக்குமரன் விடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில் தீபக்கின் மனைவியை பாராட்டி முத்துக்குமரன் பேசியதாவது,

”மிக்க மிக்க நன்றி. ஆனால் உங்கள் மீது பயங்கர கோபம். பிக் பாஸ் வீட்டில் விஷால், ரயான், அருண் பிரசாத் ஆகியோரைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் தீபக்கைத் தாண்ட முடியவில்லை. 45 வயதில் இந்த மனுஷனை தயார் செய்து அனுப்பி வைத்து எங்களைப் பாடாய் படுத்திவிட்டீர்கள்.

அதனால் மிக்க நன்றி. பிக் பாஸ் வீட்டில் அவர் செய்த அத்தனை விஷயங்களுக்கும் நீங்கள் ஆதாரமாய் இருந்துள்ளீர்கள் என்பதற்காக நன்றி. உள்ளே இருந்த அனைத்துப் போட்டியாளர்களும் யார் தீபக்கின் வழிகாட்டி எனத் தேடிக்கொண்டிருந்தனர். அதனைச் செய்த உங்களுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.



.

Previous Post

விருதுநகர்: ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு; முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு; நடந்தது என்ன? | Srivilliputhur encroachment clearance issue old man try to burn himself

Next Post

Explained: பிறப்புரிமை குடியுரிமை; `நோ’ சொன்ன ட்ரம்ப் – அமெரிக்காவில் இந்தியர்களுக்கு பாதிப்பு என்ன?| Trump new policy in Immigrant issue, what will happen to indians

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Explained: பிறப்புரிமை குடியுரிமை; `நோ’ சொன்ன ட்ரம்ப் – அமெரிக்காவில் இந்தியர்களுக்கு பாதிப்பு என்ன?| Trump new policy in Immigrant issue, what will happen to indians

Explained: பிறப்புரிமை குடியுரிமை; `நோ’ சொன்ன ட்ரம்ப் - அமெரிக்காவில் இந்தியர்களுக்கு பாதிப்பு என்ன?| Trump new policy in Immigrant issue, what will happen to indians

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In