Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அஸ்ஸாம் வெள்ளம்: 10 மாவட்டங்களில் 6 லட்சம் பேர் பாதிப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 2, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அஸ்ஸாம் வெள்ளம்: 10 மாவட்டங்களில் 6 லட்சம் பேர் பாதிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அஸ்ஸாமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தண்ணீரில் தத்தளிப்பதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

‘ரீமெல்’ புயல் காரணமாக பெய்த கனமழையால் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததால், பல பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். கோபிலி, பாரக், குஷியாரா ஆறுகளின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டியுள்ளது.

ஹைலகண்டி ஹோஜாய், மோரிகான், கரீம்கஞ்ச், நாகோன், கச்சார், திப்ருகர், கோலாகாட், கர்பி அங்லாங் மேற்கு மற்றும் திமா ஹசாவ் மாவட்டங்களில் மொத்தம் 6,01,642 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாகோனில் 2.79 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து ஹோஜாயில் 1,26,813 பேரும், கச்சாரில் 1,12,265 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

40,000-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மாநிலத்தின் பல பகுதிகளில் சாலை மற்றும் ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், சனிக்கிழமையிலிருந்து திங்கள்கிழமை வரை 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக வடகிழக்கு எல்லை ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.



.

Previous Post

`இந்தியா கூட்டணி எத்தனை இடங்கள் வெல்லும்?' – Exit Polls-க்குப் பின் ராகுல் காந்தி கூறிய பதில் என்ன?

Next Post

சென்னையிலிருந்து திருச்சி இனி வெறும் 4 மணி நேரம் தான் – வந்துவிட்டது புதிய எக்ஸ்பிரஸ்வே! | Chennai to Trichy in just 4 hrs – NHAI plans chennai Trichy expressway

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னையிலிருந்து திருச்சி இனி வெறும் 4 மணி நேரம் தான் – வந்துவிட்டது புதிய எக்ஸ்பிரஸ்வே! | Chennai to Trichy in just 4 hrs – NHAI plans chennai Trichy expressway

சென்னையிலிருந்து திருச்சி இனி வெறும் 4 மணி நேரம் தான் - வந்துவிட்டது புதிய எக்ஸ்பிரஸ்வே! | Chennai to Trichy in just 4 hrs – NHAI plans chennai Trichy expressway

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In