Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“நீ பார்க்க நல்லா இருக்க, நல்லா நடிக்கிர..அதோட நிப்பாட்டு..” – போடி வெண்ண…!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 26, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
‘போடி வெண்ணை..’ தன்னை ட்ரோல் செய்த பெண்ணை பப்ளிக்காக திட்டிய அசோக் செல்வன்..!
24
SHARES
38
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சமீபத்தில் வெளியான ‘போர் தாெழில்’ படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தவர் அசோக் செல்வன். இவர் ஒரு பெண்ணை பப்ளிக்காக “போடி வெண்ணை” என்று ட்விட்டர் பக்கத்தில் திட்டியுள்ளார்.

தேசிய விருது குறித்து அசோக் ட்வீட்..

நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள்தான் இந்தியாவின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. இதில், நல்ல தமிழ் படங்கள் சிலவற்றிற்கு விருது கிடைக்கவில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோபமாக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். சில சினிமா பிரபலங்களும் இதுகுறித்து பேசினர். பிரபல நடிகர் அசோக் செல்வன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். அதில், “கடைசி விவசாயி படத்திற்கு விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. ஆனால் ஜெய் பீம் படத்தை கண்டு கொள்ளாதது ஏன்..?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ட்ரோல் செய்த பெண்ணின் கணக்கு..

அசோக் செல்வன், ஜெய் பீம் குறித்து வெளியிட்டிருந்த பதிவிற்கு பலர் ஆதரவு தெரிவித்து போஸ்ட் போட்டனர். “போடி வெண்ணை” என்ற ட்ரோல் பக்கத்தில் இருந்தும் அசோக் செல்வனுக்கு ரிப்ளை வந்தது. அதில், “நீ பார்க்க நல்லா இருக்க, நல்லா நடிக்கிர..அதோட நிப்பாட்டு..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

PodiVennai https://t.co/R81Tu6gOOf

— Ashok Selvan (@AshokSelvan) August 25, 2023

பதிலடி கொடுத்த அசோக் செல்வன்..

அந்த கணக்கில் இருந்து வந்த ரிப்ளையை பார்த்து கடுப்பான அசோக் செல்வன், “போடி வெண்ணை” என்ற கணக்கின் பெயரையே அந்த ட்வீட்டிற்கு ரிப்ளையாக கொடுத்துள்ளார். இதற்கு நெட்டிசன்களும் சினிமா ரசிகர்களும் “போடு தலைவா..” என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அசோக் செல்வனின் ரிப்ளை தற்போது மீம் பேஜ்களிலும் உலா வர ஆரம்பித்துள்ளது.

வளர்ந்து வரும் நாயகன்..

நளன் குமாரசாமி இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு வெளியாகியிருந்த ‘சூது கவ்வும்’ படம் மூலம் அறிமுகமானவர், அசோக செல்வன். இந்த படத்தில் அவர் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் இவருடன் சேர்ந்து நடித்திருப்பார். இதற்கு முன்னர் இவரது முகம், ‘பில்லா’ படத்தில் அஜித்தின் சிறுவயது புகைப்படமாக காண்பிக்கப்பட்டிருக்கும். தமிழ் சினிமாவில், நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்கும் நாயகர்களுள் இவரும் ஒருவர். தெகடி, கூட்டத்தில் ஒருவன், ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் போன்ற இவரது படங்கள் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பினை பெற்றது. கடைசியாக இவர் நடித்திருந்த போர் தொழில் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.

விரைவில் திருமணம்..

நடிகர் அசோக செல்வன், கடந்த சில ஆண்டுகளாகவே பல தமிழ் பெண்களுக்கு க்ரஷ் மெட்டீரியலாக இருந்து வருகிறார். குறிப்பாக ஓ மை கடவுளே மற்றும் போர் தொழில் படங்களுக்கு பிறகு இவரை பலர் மானசீக காதலனாகவே ஏற்றுக்கொண்டனர். இவர் சில நாட்களுக்கு முன்பு கொடுத்திருந்த நேர்காணலில், தான் திருமணம் செய்து கொண்டால் காதல் திருமணம்தான் செய்வேன் என்று உறுதியாக சொன்னார். இதையடுத்து இவர் பிரபல நடிகையை காதலித்து வருவதாகவும் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.

யாருடன் காதல்..? எப்போது திருமணம்..? 

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர், அருண் பாண்டியன். இவர், விஜய்காந்துடன் ‘தேவன்’ படத்தில் நடித்து பிரபலமானார். பல படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவருக்கு கீர்த்தி பாண்டியன் என்ற மகள் இருக்கிறார். இவர் ‘தும்பா’ படம் மூலம் பிரபலமானார். அதன் பிறகு ‘அன்பிற்கினியாள்’ என்ற படத்தில் நடித்திருந்தார். சில வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். அசோக் செல்வனுடன் ‘சவோலே சமாளி’ என்ற படத்தில் இவர் இணைந்து பணிபுரிந்தார். அதிலிருந்து இவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளாக காதல் வளர்த்த இவர்கள் தற்போது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அவர்களது நெருங்கிய வட்டாரங்களில் தெரிவித்துள்ளனர். இவர்களது திருமண பத்திரிகை கூட இணையத்தில் லீக் ஆகி விட்டது. ஆனால், இது குறித்து இருவரது தரப்பிலும் இன்னும் வாய் திறக்காமல் உள்ளனர்.

.

Tags: AshokAwardBhimFanissueJaiNationalSelvanSlammedTwitter
Previous Post

மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய மேலும் கால அவகாசம் நீட்டிப்பு

Next Post

மலிவான அரசியலுக்காக தேசிய விருதின் மாண்பை சீர்குலைக்க கூடாது – முதல்வர் ஸ்டாலின் கருத்து

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மலிவான அரசியலுக்காக தேசிய விருதின் மாண்பை சீர்குலைக்க கூடாது - முதல்வர் ஸ்டாலின் கருத்து

மலிவான அரசியலுக்காக தேசிய விருதின் மாண்பை சீர்குலைக்க கூடாது - முதல்வர் ஸ்டாலின் கருத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In