Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘இளைய தலைவர்’ சச்சின் பைலட்: உட்கட்சி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைத்த அசோக் கெலாட்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 24, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
‘இளைய தலைவர்’ சச்சின் பைலட்: உட்கட்சி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைத்த அசோக் கெலாட்
10
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே மோதல் இருப்பதாகவும், உட்கட்சி பூசல் நிலவுவதாகவும் எதிர்க்கட்சிகள் கூறிவந்த நிலையில், சச்சின் பைலட்டை ‘இளைய தலைவர்’ எனக் குறிப்பிட்டு அசோக் கெலாட் முற்றுப்புள்ளி வைத்தார்.

ராஜஸ்தானில் கடந்த 2020ம் ஆண்டு முதல்வர் அசோக் கெலாட் மற்றும் அப்போது துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 18 எம்எல்ஏ.,க்கள் ஆதரவுடன் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனையடுத்து சச்சின் பைலட் துரோகி என்றும் அசோக் கெலாட் கடுமையாக விமர்சித்தார். பின்னர் காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு இருவருக்கும் இடையிலான பிரச்னையை முடிவுக்கு கொண்டுவந்தது.

இந்த ஆண்டு துவக்கத்தில் மீண்டும் கெலாட் அரசுக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். சொந்த கட்சியின் ஆட்சிக்கு எதிராகவே ‘ஊழல் எதிர்ப்பு யாத்திரை’ நடத்தினார். இது காங்., தலைமைக்கு மீண்டும் தலைவலியை கொடுத்தது.

ரன் அவுட்

நாளை (நவ.,25) அம்மாநில சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரசில் உட்கட்சி பூசல் நிலவுவதாக பிரதமர் மோடி பிரசாரம் செய்யும்போதெல்லாம் குறிப்பிட்டிருந்தார். மோடி பேசுகையில், ‘கிரிக்கெட் வீரர்கள் தங்கள் அணிக்காக ரன்கள் சேர்ப்பார்கள். ஆனால் காங்கிரசில் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு ரன் சேர்க்காமல், மற்றவர்களை ரன் அவுட் ஆக்குவதிலேயே 5 ஆண்டுகளை எடுத்துக்கொண்டுள்ளனர்’ என விமர்சித்திருந்தார்.

இந்த தேர்தலுக்கு பிறகு இரு தலைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, காங்கிரசில் பிரச்னை எழும் என எதிர்பார்க்கப்பட்டது. இருவருக்குமான பிரச்னைகள் தொடர்பாக சச்சின் பைலட் முன்னதாக கூறுகையில், ”அவை கடந்த கால நிகழ்வுகள். நாங்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் ஆகியோரை சந்தித்தோம். கட்சி மேலிடம் என்னிடம் அனைத்தையும் மன்னித்து மறந்து அடுத்த கட்டத்துக்குச் செல்லுங்கள் என்று கூறியதாக” விளக்கமளித்தார்.

இளைய தலைவர்

இந்த நிலையில் நாளை தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, சச்சின் பைலட் ஓட்டளிக்க வலியுறுத்தும் வீடியோவை பகிர்ந்த முதல்வர் அசோக் கெலாட், ‘காங்கிரசுக்கு வாக்களிக்குமாறு ராஜஸ்தான் மக்களுக்கு காங்கிரஸ் இளைய தலைவர் சச்சின் பைலட் வேண்டுகோள் விடுக்கிறார்’ எனக் குறிப்பிட்டுள்ளார். சச்சின் பைலட்டை இளைய தலைவர் என அசோக் கெலாட் குறிப்பிட்டதை அடுத்து, உட்கட்சி பூசல் நிலவுகிறது என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

.

Previous Post

சம்பளம் கேட்ட தலித் ஊழியரின் வாயில் செருப்பைத் திணித்த முதலாளி!

Next Post

விமானங்களை லஞ்சமாக பெற்ற விமான போக்குவரத்து துறை அதிகாரி பணியிடை நீக்கம்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விமானங்களை லஞ்சமாக பெற்ற விமான போக்குவரத்து துறை அதிகாரி பணியிடை நீக்கம்..!

விமானங்களை லஞ்சமாக பெற்ற விமான போக்குவரத்து துறை அதிகாரி பணியிடை நீக்கம்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In