மேற்கு மாநிலங்களான குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் 7 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி புதன்கிழமை வெளியிட்டது.
குஜராத்தில் இருந்து பாஜகாவின் தலைவர் ஜேபி நட்டா போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அசோக் சவான் மகாராஷ்டிராவில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

ஒரே ஒரு சீட்டுக்காக கட்சி மாறியது மிகவும் தவறு எதிர்காலத்தில் இது போன்ற நபர்களுக்கு அரசியல் வாழ்க்கையே இருக்காது. கட்சிக்குள் ஏதேனும் மனஸ்தாபம் இருந்தால் வெளிப்படையாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் நம் மீது தவறு இருந்தால் அதை திருத்திக் கொள்ள வேண்டும் அதை விட்டுவிட்டு கட்சி மாறுவது மிகவும் கேவலமான செயல்