Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

குழந்தை ராமரை தரிசனம் செய்ய அயோத்திக்கு செல்வேன்: அரவிந்த் கேஜரிவால்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 17, 2024 - Updated on January 18, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
குழந்தை ராமரை தரிசனம் செய்ய அயோத்திக்கு செல்வேன்: அரவிந்த் கேஜரிவால்
4
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

aravind_kejriwal_PTI

கோப்புப்படம்

ராமா் கோயில் சிலை பிரதிஷ்டை விழா முடிந்ததும் குடும்பத்துடன் அயோத்திக்கு சென்று குழந்தை ராமரை தரிசனம் செய்ய உள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்  புதன்கிழமை தெரிவித்தார்.

தில்லி அரசின் புனித யாத்திரைத் திட்டத்தின் கீழ்  துவாரகாதீசர் கோயிலுக்குச் செல்லும் மூத்த குடிமக்களை சந்தித்த கேஜரிவால்,  பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

“பாதுகாப்புக் காரணங்களுக்காக ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவிற்கு ஒருவருக்கு மட்டுமே அனுமதிக் கடிதம் கிடைத்தது. தனிப்பட்ட முறையில் அழைப்பிதழ் கொடுக்க ஒரு குழு வரும் என்று சொன்னார்கள். ஆனால் யாரும் வரவில்லை.

நான் என் மனைவி மற்றும் குழந்தைகளுடன் குழந்தை ராமரை தரிசனம் செய்ய விரும்புகிறேன்.  எனது பெற்றோரும் குழந்தை ராமரை தரிசிக்க ஏங்குகிறார்கள்.

ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் விழாவுக்குப் பிறகு நான் எனது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் குழந்தை ராமரை தரிசனம் செய்ய அயோத்திக்கு  செல்வேன்” என்று தெரிவித்தார்.

ராமர் கோயில் அறக்கட்டளை சார்பில் தில்லி முதல்வருக்கு  தபால் மூலம் முறையான அழைப்பிதழை அனுப்பியுள்ளோம் என்று  விஹெச்பி செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் முன்னதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

.

Previous Post

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு: உயர்நிலை குழுவுக்கு எழுதிய கடிதத்தில் திமுக அடுக்கும் காரணங்கள்

Next Post

விமான ஓடுதளத்தில் சாப்பிட்ட பயணிகள்: இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1.20 கோடி அபராதம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விமான நிலைய ஓடுதளத்தில் அமர்ந்து சாப்பிட்ட விமான பயணிகள்: மன்னிப்பு கேட்ட இண்டிகோ!

விமான ஓடுதளத்தில் சாப்பிட்ட பயணிகள்: இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1.20 கோடி அபராதம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In