இம்மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுவிட்டால் 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு மீண்டும் மோடி ஆட்சிக்கு வர முடியாது. அமலாக்கபிரிவு மற்றும் சிபிஐ-யை பயன்படுத்தி மாநில அரசுகளை மத்திய அரசு கலைத்துக்கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார். அவரை தொடர்ந்து உத்தவ் தாக்கரே பேசுகையில், “நாட்டையும், ஜனநாயகத்தையும் காக்க நாம் ஒன்று கூடியிருக்கிறோம். இதனை எதிர்க்கட்சிகள் என்று அழைக்கக்கூடாது என்று நினைக்கிறேன். மத்திய அரசு ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புக்கு எதிராக இருப்பதால் அவர்களைத்தான் எதிர்ப்பாளர்கள் என்று அழைக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே கொல்கத்தா சென்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து மத்திய அரசு டெல்லிக்கு எதிராக கொண்டு வந்துள்ள மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். டெல்லியில் ஏ கிரேடு அதிகாரிகளை நியமிப்பது மற்றும் இடமாற்றும் செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம் இருக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்திருக்கிறது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்காமல் மத்திய அரசு இந்த மசோதாவை கொண்டு வந்திருக்கிறது என்கிறது ஆம் ஆத்மி. மத்திய அரசு புதிய நாடாளுமன்றத்தை வரும் 28ம் தேதி திறக்க இருக்கிறது. இந்த திறப்பு விழாவை புறக்கணிக்க அதிகப்படியான எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

