Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

‘நான் தவறிழைத்துவிட்டேன்…’ – உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட அர்விந்த் கேஜ்ரிவால்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 26, 2024
in Default
0
‘நான் தவறிழைத்துவிட்டேன்…’ – உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட அர்விந்த் கேஜ்ரிவால்..!
48
SHARES
78
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பாஜக ஐடி பிரிவு தொடர்பாக யூடியூபர் துருவ் ரதி வெளியிட்ட ஒரு அவதூறு வீடியோவை ரீ-ட்வீட் செய்து, தான் தவறிழைத்துவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அர்விந்த் கேஜ்ரிவால்

அர்விந்த் கேஜ்ரிவால்

பாஜக ஐடி பிரிவு தொடர்பாக, சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை மறு பகிர்வு (ரீ-ட்வீட்) செய்ததன் மூலம் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. இது தொடர்பாக கேஜ்ரிவாலுக்கு சம்மன்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கேஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அங்கு நடைபெற்ற விசாரணையில் கேஜ்ரிவாலுக்கு சம்மன்கள் அனுப்பப்பட்டதில் தவறில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் கேஜ்ரிவால் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கேஜ்ரிவால் தரப்பில் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதிட்டார். அப்போது கேஜ்ரிவாலின் பதில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

அதில், “பாஜக ஐடி பிரிவு தொடர்பாக யூடியூபர் துருவ் ரதி வெளியிட்ட ஒரு அவதூறு வீடியோவை மறு பகிர்வு செய்ததன் மூலம் நான் தவறுசெய்துவிட்டேன்” என தெரிவிக்கப்பட்டது. மேலும் கிரிமினல் அவதூறு வழக்கு தொடுத்த விகாஸ் சாங்க்ரித்யாயனுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கம் தனது பதிவில் இல்லை என்பதை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள தவறிவிட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், “டெல்லி முதல்வர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதால், இந்த வழக்கை முடித்துக்கொள்ள விரும்புகிறீர்களா? என புகார்தாரர் விகாஸ் சாங்க்ரித்யாயன் தரப்பிடம் கேள்வியெழுப்பினர்.

மேலும், கேஜ்ரிவால் மீதான அவதூறு வழக்கில் வரும் மார்ச் 11ம் தேதி வரை எந்த உத்தரவையும் டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டாம் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Previous Post

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அரிதான அறுவைசிகிச்சை ;எதிர்காலத்தில் மருந்துகளை பயன்படுத்தும் அவசியத்தை நீக்கி சாதனை…

Next Post

பொருளாதார நிபுணருக்கு புதிய பதவி – காங்கிரஸ் அதிரடி..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பொருளாதார நிபுணருக்கு புதிய பதவி – காங்கிரஸ் அதிரடி..!

பொருளாதார நிபுணருக்கு புதிய பதவி - காங்கிரஸ் அதிரடி..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In