நாடாளுமன்ற அரசு தொலைக்காட்சி சேனல் எதிர்கட்சிகளை காண்பிக்க மறுப்பதும், ஆளும் கட்சிகளை அதிக நேரம் காண்பிப்பதும் முறைகேடானது என்றும், இது குறித்து ஆய்வு செய்து தனக்கு பதிலளிக்கும்படி மேற்கு வங்காள MP சாகேத் கோகலே நாடாளுமன்ற சேனல் அதிகாரிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது….
மிகுந்த கவலையும் அவசரமும் கொண்ட ஒரு விஷயத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வரவே இந்த கடிதத்தை நான் அனுப்பியுள்ளேன். ராஜ்யசபா அமர்வுகளின் சன்சாத் டி.வி ( நாடாளுமன்ற சேனல் )ஒளிபரப்பின் போது வேண்டுமென்றே தவறாக கேமராவை மாற்றி எதிர் கட்சிகளை காண்பிக்காமல் தவிர்ப்பதை குறித்து இந்த கடிதத்தை அனுப்புகிறேன்.
கடந்த 10 நாட்களில், ராஜ்யசபா அமர்வின் நேரடி ஒளிபரப்பின் போது எதிர்க்கட்சி பெஞ்சுகள் இருக்கும் இடத்தை கேமரா அரிதாகவே காட்டப்பட்டது. சபையின் வலது பக்கத்தில் அமர்ந்திருக்கும் எதிர்க்கட்சி பெஞ்சுகளைக் அரிதாகவே மக்கள் காணமுடிகிறது, இதனால் எதிர் கட்சிகள் பேசுவது இந்திய மக்களுக்கு தெரியாமலேயே போய்விடுகிறது..
ஒரு அரசு ஒளிபரப்பாளராக, நீங்கள் கட்சி சார்பற்றவராக இருக்க வேண்டும் மற்றும் மற்றும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி பெஞ்சுகள் இரண்டிற்கும் நேரலை டிவி சமமான கவரேஜ் கொடுக்க வேண்டும். அதே வேளையில், உங்களது நடவடிக்கைகள் எதிர்க்கட்சி பெஞ்ச்களின் காட்சிகளை முற்றிலுமாக இருட்டடிப்பு செய்கின்றன. இவை அனைத்தும் உங்களது ஒருகட்சி சார்பு மற்றும் பாகுபாடு காட்டுவதை காணமுடிகிறது.
“எனவே, நீங்கள் இதை விசாரித்து எனக்கு எழுத்து பூர்வமாக அறிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இனி வரும் மீதமுள்ள அமர்வுகளில்
சன்சாத் தொலைக்காட்சி இந்த பிரச்னையை சரிசெய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்கப் போகிறது என்பதை உடனடியாக பதிலளிக்க கேட்டுக்கொள்கிறேன் ..
என்று அந்த கடிதத்தில் கோரியுள்ளார்.


