புதுடில்லி: கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளில் ஒரு சிலரை மட்டும் நியமித்து விட்டு ஒரு சிலரை நியமிக்காமல், நிலுவையில் வைத்திருப்பது ஏற்புடையது அல்ல என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய அரசின் செயல்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், பணியிட மாற்றம் தொடர்பான விஷயங்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான, ‘கொலீஜியம்’ முடிவு எடுத்து, அதை மத்திய அரசுக்கு பரிந்துரைக்கிறது. இதை பரிசீலித்து, நீதிபதிகள் நியமனத்துக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும்.
இந்நிலையில், இந்த விஷயத்தில் முடிவை அறிவிப்பதில் மத்திய அரசு தாமதம் செய்வதால், பிரச்னைகள் உருவாகிறது. எனவே, மத்திய அரசு முடிவை அறிவிப்பதற்கான கால வரையறையை நிர்ணயிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று(நவ.,07) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியம் பரிந்துரையில் ஒரு சிலரை மட்டும் நியமிக்கும் மத்திய அரசின் போக்கு ஏற்புடையது அல்ல. கொலீஜியம் பரிந்துரை செய்யும் நபர்களில் சிலரை மட்டும் தேர்வு செய்து மத்திய அரசு நியமிப்பதா?.
நீதிபதிகளை தேர்ந்தெடுத்து நியமிக்கும் போக்கை மத்திய அரசு நிறுத்தி கொள்ள வேண்டும். மத்திய அரசின் நடவடிக்கையால் நீதிமன்றத்தில் ஒழுங்கின்மை ஏற்படும். கொலீஜியம் பரிந்துரையில் நிலுவையில் உள்ள நியமனங்களை உடனே பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதுடில்லி: கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளில் ஒரு சிலரை மட்டும் நியமித்து விட்டு ஒரு சிலரை நியமிக்காமல், நிலுவையில் வைத்திருப்பது ஏற்புடையது அல்ல என உச்சநீதிமன்ற நீதிபதிகள்

