யார் இந்த ஏபிஜே அப்துல் கலாம்:
ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல்கலாம், 1931ஆம் ஆண்டு, ராமேஸ்வரத்தில் ஜைனுலாப்தீன் மரைக்காயர் மற்றும் ஆஷியம்மா தம்பதிக்கு கடைசி மகனாகப் பிறந்தவர். ஏபிஜே அப்துல்கலாமின் தந்தை, அவ்வூரில் இருந்த மசூதியின் இமாம் ஆகவும், அவரது தாய் இல்லத்தரசியாகவும் இருந்தவர். மேலும், அவரது தந்தை தனுஷ்கோடிக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையே படகு போக்குவரத்தினை நடத்திக்கொண்டிருந்தார். அப்துல் கலாம் பிறந்தபோது, குடும்பத்தில் வறுமை தாண்டவமாடியது. அதனால், சிறுவயதில் குடும்பத்தின் வருவாயைக் கூட்ட, ஏபிஜே அப்துல்கலாம் செய்தித்தாள்களை விற்றார்.
