போபால்: நேர்மையற்ற காங்கிரஸ் பொய் தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகிறது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்தியபிரதேசத்தில் அனுராக் தாக்கூர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாஜ., ஆட்சியில் மத்திய பிரதேச மாநிலம் முன்னேறியுள்ளது. ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் நேர்மையற்ற காங்கிரஸ், பொய்யான தேர்தல் வாக்குறுதியை அளித்தது. மக்களை ஏமாற்றி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.
அவர்களின் உத்தரவாதங்கள் தோல்வியடைந்து விட்டன. அதேபோல் வரும் 5 மாநில சட்டசபை தேர்தலுக்கும் காங்கிரஸ் பொய் தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் மொபைல் கிளினிக்குகள் மூலம் இலவச சிகிச்சை அளிப்போம் என காங்கிரஸ் கூறியது. சொந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் வெளியே சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு காரணம் என்ன?. இவ்வாறு அவர் கூறினார்.

