விருதுநகர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று விருதுநகர் வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாட்டையும், அதற்காக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவரை அழைத்து பேசுபொருளாக்கியதையும் நாடகமாகத்தான் பார்க்கிறேன். முதல்வர் வெளிநாட்டில் 17 நாள்கள் இருந்தார். எதிர்பார்த்த அளவு முதலீடுகள் வரவில்லை. அதை திசைத்திருப்ப முதல்வர் ஸ்டாலின், திருமாவளவனிடம் இந்த நாடகத்தை அரங்கேற்றுங்கள் என்று கூறியிருப்பதுபோல், மதுஒழிப்பு மாநாடு பற்றிய பேச்சுகள் உள்ளது. இந்த அரசு 2026 தேர்தலை எதிர்நோக்கி உள்ளது.
