Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அன்னை பாத்திமா கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு கூட்டம்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 2, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அன்னை பாத்திமா கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு கூட்டம்.
9
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அன்னை பாத்திமா கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது. லஞ்சம் வாங்கவும் கொடுக்கவும் மாட்டேன் என மாணவர்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் வேண்டுகோள்

ஆண்டுதோறும் அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி திருமங்கலம் ஆலம்பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு கூட்டம் கல்லூரி தாளாளர் எம். எஸ். ஷா மற்றும் பொருளாளர் சகிலா ஷா ஆகியோரின் அனுமதியின் பேரில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் விழிப்புணர்வு கூட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில் நாட்டின் பொருளாதாரம், அரசியல், சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் முக்கிய தடையாக உள்ளதாகவும், எதிர்காலத்தில் அரசு ஊழியர்களாக மாறும் வாய்ப்புள்ள மாணவ-மாணவியர்கள் லஞ்சம் வாங்கவும் மாட்டேன் கொடுக்கவும் மாட்டேன் என்ற உறுதி ஏற்று நாட்டின் வளர்ச்சிக்கு துணை புரிய வேண்டும் எனக் கூறினார்.

மதுரை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் காவல் ஆய்வாளர்கள் ஆம்புரோஸ் ஜெயராஜ் மற்றும் சூர்யகலா ஆகியோர் கலந்துகொண்டு லஞ்சம் பெறுவதால் அரசின் திட்டங்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதையும் குறிப்பிட்ட சில லஞ்ச வழக்கு விபரங்களை எடுத்துரைத்து மாணவ- மாணவர்களிடையே விழிப்புணர்வு உரை நிகழ்த்தினர்.

முன்னதாக வணிக மேலாண்மை துறை உதவிப் பேராசிரியர் திருப்பதி வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தடய அறிவியல் துறை தலைவர் சீனிவாசன் தலைமையில் மாணவ-மாணவியர்கள் அஸ்வின், கார்த்திகேயன், ஜெனிடா, ஷோபனா, ராபியா, தாருன்னிஸா, ஸ்ரீ ஜெயலட்சுமி ஆகியோரும் அரங்க ஏற்பாடுகளை மனித வள மேனேஜர் முகமது ஃபாசிலும் செய்தனர்.

Previous Post

கெஜ்ரிவால் ஏன் விசாரணைக்கு ஆஜராகவில்லை தெரியுமா? விளக்கம் அளித்த பாஜக..!

Next Post

ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் மதுரை காமராசர் பல்கலை. பட்டமளிப்பு விழாவுக்கு பலத்த பாதுகாப்பு..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் மதுரை காமராசர் பல்கலை. பட்டமளிப்பு விழாவுக்கு பலத்த பாதுகாப்பு..!

ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் மதுரை காமராசர் பல்கலை. பட்டமளிப்பு விழாவுக்கு பலத்த பாதுகாப்பு..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In