Tamil Live Breaking News : புருனே மற்றும் சிங்கப்பூருக்கு செல்லும் பிரதமர் மோடி
இரு நாடுகள் உடனான தூதரக உறவை பலப்படுத்த புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ள இன்று புருனே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி.
Tamil Live Breaking News : பாராலிம்பிக்ஸ் 2024 – தங்கம் வென்றார் சுமித் அண்டில்
பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் புதிய சாதனையுடன் தங்க பதக்கத்தை தக்கவைத்தார் இந்திய வீரர் சுமித் அண்டில்.
கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 68.55 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து அவர் தங்கபதக்கத்தை வென்றார்.
ஆனால் தற்போது, 70.59 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து தனது முந்தைய சாதனையை முறியடித்தார் சுமித்.
Tamil Live Breaking News : அடுத்த மூன்று மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை – வானிலை மையம்
தமிழகத்தில் காலை 10 மணி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, கோயம்பத்தூர், நீலகிரி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு காலை வணக்கம். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.
