Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அன்னூரே அரண்டு போச்சு.. பஸ் ஸ்டாண்டு பக்கத்துல செய்யுற காரியமா இது.. கோவில் அருகே இப்படியா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 12, 2023
in அரசியல் செய்திகள்
0
அன்னூரே அரண்டு போச்சு.. பஸ் ஸ்டாண்டு பக்கத்துல செய்யுற காரியமா இது.. கோவில் அருகே இப்படியா?
29
SHARES
46
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Tamilnadu oi-Velmurugan P
Updated: Monday, June 12, 2023, 16:02 [IST]
கோவை: கோவை மாவட்டம் அன்னூரில் மதுபோதை தலைக்கேறிய போதை ஆசாமி கோவில் அருகே சாலையோரம் உருண்ட படியே இருந்தார்,. அவர் மீது தண்ணீரை ஊற்றி எழுப்ப முயற்சி செய்தும் அவர் எழுந்திருக்கவில்லை. மாறாக போதையில் தரையில் உருண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. காலையில் மது அருந்தும் ஆசாமிகள், ஃபுல்லாக குடித்துவிட்டு, மதிய வெயிலில் சாலையோரங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் தஞ்சம் அடைகிறார்கள். மது அருந்தும் கலாச்சாரம் மிக அதிகமாகிவிட்டது. மது அருந்துவது என்பது பலருக்கும் தினசரி செயல்களில் ஒன்றாக மாறிவிட்டது. மறைந்து மறைந்து செய்து வந்தவர்கள் இப்பொழுது ஓப்பனாக மக்கள் முன்னிலையிலேயே செய்ய தொடங்கிவிட்டார்கள். மது அருந்துவது அவர்களின் உடல்நலனை கெடுப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பத்தையும் பொருளாதார ரீதியாக அழிக்கிறார்கள். குடிப்பழக்கம் உள்ள குடும்பங்களால் பணம் சேமித்து வாழ்வில் முன்னேற்றம் அடையவே முடியாத நிலை காணப்படுகிறது. குறிப்பாக தினசரி குடிப்பழக்கம் உள்ளவர்களின் குடும்பம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கின்றன. சமூகத்தின் நோயாக மாறி உள்ள குடிப்பழக்கத்தால், மக்களும் கடுமையான தொல்லைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். அப்படி ஒரு தொல்லையை பற்றித்தான் இப்போது பார்க்க போகிறோம். கோவை மாவட்டம் அன்னூர் பேருந்து நிலையம் அருகே ஒதிமலை சாலையில் 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. அங்கு, எப்போதுமே குடிமகன்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு வருபவர்கள் மது வாங்கி குடித்து விட்டு, சாலைகளில் ஆங்காங்கே விழுந்து கிடக்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் உள்ள மன்னீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த டாஸ்மாக் கடைக்கு வந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் மது வாங்கி குடித்திருக்கிறார். பின்னர் அவர் போதை தலைக்கேறிய நிலையில், தள்ளாடியபடியே மன்னீஸ்வரர் கோவில் அருகே கீழே விழுந்து சாலையில் அங்குமிங்குமாக உருண்டார். இதை பார்த்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் சிலர் அந்த நபரை எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் எழுந்திருக்காமல் தொடர்ந்து சாலையில் உருண்டபடியே இருந்தார். இதனால் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். அப்போதும் அவர் எழவே இல்லை. நீண்ட நேரத்துக்கு பின்னர் அவர் அப்புறப்படுத்தப்பட்டார். மதுபோதையில் ஒருவர் சாலையில் படுத்து உருண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
An intoxicated drug addict was lying on the roadside near the temple in Annur, Coimbatore district. Despite trying to wake him up by pouring water on him, he did not wake up. Instead he rolled on the floor intoxicated. A related video has been released on social media.

.

Previous Post

ரயில்வே துறையில் ‘அவுட்சோர்சிங்’ தொழிலாளர்களுக்கான புது திட்டம்: சம்பளம், பிஎஃப் நடவடிக்கை கண்காணிப்பு

Next Post

சென்னை | பச்சிளம் குழந்தையை கொன்ற வழக்கில் தாய், மகளுக்கு ஆயுள் தண்டனை: மகளிர் நீதிமன்றம் தீரப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை | பச்சிளம் குழந்தையை கொன்ற வழக்கில் தாய், மகளுக்கு ஆயுள் தண்டனை: மகளிர் நீதிமன்றம் தீரப்பு

சென்னை | பச்சிளம் குழந்தையை கொன்ற வழக்கில் தாய், மகளுக்கு ஆயுள் தண்டனை: மகளிர் நீதிமன்றம் தீரப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In