தீபாவளியை முன்னிட்டு, தாம்பரம்-நாகர்கோவில் மற்றும் தாம்பரம் – மானாமதுரை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே செவ்வாய்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தாம்பரத்தில் இருந்து நாளை(அக்.30) பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ஏசி ரயில், மறுநாள் காலை 4.40 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
மறுவழித்தடத்தில் அக். 31 ஆம் தேதி காலை 8.45-க்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ஏசி ரயில் இரவு 9.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இதையும் படிக்க: நாளை பிற்பகல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! தீபாவளி ஸ்பெஷல்!
Festival Special, Train No. 06109/06110 Tambaram – Nagercoil – Tambaram AC will be operated to clear extra rush of passengers in view of #Diwali
Advance Reservation for the special trains will open shortly.#Diwali2024 #SouthernRailway pic.twitter.com/nJHLy8fp6b
— Southern Railway (@GMSRailway) October 29, 2024
இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் வழியாக இயக்கப்படுகிறது.
அதேபோல், தாம்பரத்தில் இருந்து மானாமதுரைக்கு நாளை(அக். 30) மாலை 5 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுவழித்தடத்தில், சிறப்பு ரயில் மானாமதுரையில் இருந்து அக். 31 ஆம் தேதி காலை 11.45 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வந்தடையும்.
Attention passengers!! #Festival special Train No. 06019/06020 Tambaram – Manamadurai – Tambaram will be operated to clear extra rush of passengers in view of #Diwali
Advance Reservation for the special trains will open shortly#Diwali2024 #SouthernRailway pic.twitter.com/ELq5w01yns
— Southern Railway (@GMSRailway) October 29, 2024
இதைத் தவிர்த்து கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் நாளை காலை 9.35 மணிக்கும், மறுவழித்தடத்தில் திண்டுக்கல் – கோவை இடையே பிற்பகல் 2 மணிக்கும் இயக்கப்படுகிறது.
Festival Special Train No. 06106/06107 Coimbatore – Dindigul – Coimbatore Unreserved MEMU Express will be operated to clear extra rush of passengers.#Diwali2024 #SouthernRailway pic.twitter.com/HoOWRZ66wd
— Southern Railway (@GMSRailway) October 29, 2024
