Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்துவதை பெருமையாகத்தான் கருதுகிறேன்!' – அண்ணாமலை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 20, 2024
in அரசியல் செய்திகள்
0
`கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்துவதை பெருமையாகத்தான் கருதுகிறேன்!' – அண்ணாமலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள நாககவுண்டம்பாளையத்தில் விவசாய சங்கத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான என்.எஸ்.பழனிசாமி நினைவு மணிமண்டபத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று மரியாதை செலுத்தினார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், “முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எனக்கு அனுபவம் இல்லை எனப் பேசியுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கும்பிடு போடுவதில் எந்த தவறுமில்லை. அடுத்தவர்கள் காலில் விழுவதுதான் தவறு. ஆர்.பி.உதயகுமார், சசிகலா முன்பு கைகட்டி வாய் பொத்தி மூன்றடி தள்ளி நிற்பார். பேசும்போதுகூட வார்த்தை அதிகமாக வராது. 50 ஆண்டுகளாக அரசியல் வாழ்வில் இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும், பா.ஜ.க-வுக்கும் சித்தாந்த ரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும், தமிழகத்துக்கு அவர் செய்திருக்கக்கூடிய பணிக்காக சாதாரண விவசாயி மகனான நான் அவரது நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்துவதை பெருமையாகத்தான் கருதுகிறேன்.

அண்ணாமலை

வாஜ்பாய் ஆட்சியில் எங்களுடன் கருணாநிதி கூட்டணி அமைத்திருந்தார். அப்போது, பா.ஜ.க-வைப் பற்றி தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டன. அப்போது தனது கட்சிக்காரர்களிடம் பா.ஜ.க-வைப் பற்றி தவறான கருத்துகள் பரப்ப வேண்டாம் என தெரிவித்தவர் கருணாநிதி. 50 ஆண்டுக்காலம் அரசியல் வாழ்விலும், 30 ஆண்டுக்காலம் திரைத்துறையிலும் பங்காற்றிய கருணாநிதி, பல்வேறு விமர்சனங்களை தன் முன் வைத்தாலும் அதை எளிதாக கையாளக் கூடியவர். முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தி உள்ளேன். அண்ணாவுக்கும், பா.ஜ.க கொள்கைக்கும் கடவுள் ரீதியாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழகத்துக்காக பணியாற்றிய தலைவர்களுக்கு மரியாதை செலுத்தக் கூடாது என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஜெயலலிதா நினைவிடத்துக்கும் சென்று நான் மரியாதை செய்வேன்.

அண்ணாமலை

தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவதை எல்லாம் ஒரு குற்றமாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்வைக்கிறார். நான் யார் காலிலும் விழவில்லை. யார் முன்பும் கூனிக்குறுகி நிற்கவில்லை. கம்பீரமாக நடந்து சென்று, முதுகு வளையாமல் தலைவர்களுக்கு வணக்கம் செலுத்தி விட்டு வந்திருக்கிறேன். அதற்கு நான் பெருமைப்படுகிறேன்” என்றார்.

`தந்தையின் நாணயத்தை வெளியிட, தனது நாணயத்தை அடமானம் வைத்துவிட்டார் ஸ்டாலின்’- ஆர்.பி.உதயகுமார் தாக்கு



.

Previous Post

தீர்ப்பில் நீதிபதிகளின் தனிப்பட்ட கருத்துகள் இருக்கக்கூடாது

Next Post

மகளிர் டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மகளிர் டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம்!

மகளிர் டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In