Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Annamalai: ‘அவரை போய் பாருங்க’ அண்ணாமலைக்கு ஆர்டர் போட்ட டெல்லி – மாநில தலைமையில் மாற்றமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 1, 2025
in அரசியல் செய்திகள்
0
Annamalai: ‘அவரை போய் பாருங்க’ அண்ணாமலைக்கு ஆர்டர் போட்ட டெல்லி – மாநில தலைமையில் மாற்றமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


‘அ.தி.மு.க கூட்டணி அமைவதில், அண்ணாமலை ஒரு இடைஞ்சலாக இருக்கக் கூடாது’ என்கிற கருத்து டெல்லி பா.ஜ.க தலைமையிடம் நிலவுகிறது. ‘கட்சிக்காகத் தீவிரமாக உழைத்தவர் அவர். அவரை நீக்கிவிட்டால் தமிழக பா.ஜ.க அதளபாதாளத்திற்குப் போய்விடும்’ என அண்ணாமலைக்கு நெருக்கமான சில பா.ஜ.க புள்ளிகள் டெல்லியில் சமாதானம் பேசியிருக்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் மேலிடம் கேட்கவில்லை. ‘அண்ணாமலை என்ன ரிசல்ட் கொடுத்துவிட்டார்..?’ என்பதுதான் டெல்லியின் கேள்வியாக இருக்கிறது.

வழக்கமாக, பா.ஜ.க-வில் அதிரடி மாற்றங்கள் எப்போதுமே நிகழும். தெலங்கானாவில், பா.ஜ.க-வுக்கு நான்கு எம்.பி-க்களை வென்றெடுத்துத் தந்தவர் பண்டி சஞ்சய் குமார். அம்மாநிலத்தில், பா.ஜ.க-வின் வளர்ச்சிக்குக் கடுமையாக உழைத்தவர். அண்ணாமலைக்கும் மேலாக டெல்லியில் செல்வாக்கும் வைத்திருப்பவர். அவரையே, மாநிலத் தலைவர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு, கிஷன் ரெட்டியிடம் அப்பதவியைக் கொடுத்தது டெல்லி. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு, தேசிய பொதுச் செயலாளர் பதவியிலிருந்த பண்டி சஞ்சய் குமார், கடந்த வருடம்தான் மத்திய உள்துறை இணையமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆக, பா.ஜ.க-வில் எப்போதுமே சர்ப்ரைஸ்கள் நிகழும். அது அண்ணாமலை விவகாரத்திலும் நிகழப் போகிறது.

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

அடுத்த மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன், எல்.முருகன், வானதி சீனிவாசன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன. ‘மூன்று மாதத்திற்கு தலைவர் பதவிக்கே ஆள் போடமால், ஒரு ஒருங்கிணைப்புக்குழுவை வைத்து கட்சியை வழிநடத்தலாமா…’ என்ற ஆலோசனையும் டெல்லியில் நடைபெறுகிறது. எது எப்படியோ, இன்னும் சில நாள்களில் அண்ணாமலை மாற்றப்பட போவது தெளிவாகத் தெரிகிறது. கடைசி முயற்சியாக, கர்நாடகா மடத்தின் வழியில், தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ளப் பார்க்கிறார் அண்ணாமலை. ஆனால், டெல்லியிலேயே பெரிய பெரிய மாற்றங்கள் நிகழத் தொடங்கியிருப்பதால், மலையின் பதவிக்கு உத்தரவாதம் இல்லை” என்றனர் விரிவாக.

இந்தச் சூழலில், இன்று சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்ற பா.ஜ.க சட்டமன்றக் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரனிடம், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமாரும், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் நெருங்கி பேசியிருக்கிறார்கள். “மாநிலத் தலைவராவதற்கு வாழ்த்துகள்..” என அந்த அ.தி.மு.க சீனியர்கள் சொன்னதாகச் சொல்கிறது கோட்டை வட்டாரம்.

எது எப்படியோ, இன்னும் ஒருவாரத்தில் அண்ணாமலையின் பதவி குறித்தான பஞ்சாயத்தில் ஒரு விடை கிடைத்துவிடும்.!



.

Previous Post

எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன்.. கே.சி.பழனிசாமி வழக்கில் கோவை நீதிமன்றம் உத்தரவு!

Next Post

தில்லி போட்டி: டிக்கெட் விற்பனை! கிரிக்கெட் ரசிகர்கள் கவனிக்க..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தில்லி போட்டி: டிக்கெட் விற்பனை! கிரிக்கெட் ரசிகர்கள் கவனிக்க..!

தில்லி போட்டி: டிக்கெட் விற்பனை! கிரிக்கெட் ரசிகர்கள் கவனிக்க..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In