தனது திரைப்படங்களில் அவ்வப்போது அரசியல் வசனங்களைப் பேசியும், மக்கள் இயக்கம் என்ற பெயரில் தனது ரசிகர் மன்றங்களால் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் தான் அரசியலுக்கு வருவதை வெளிப்படுத்திக்கொண்டிருந்த நடிகர் விஜய், கடந்த மார்ச் மாதம் `தமிழக வெற்றிக் கழகம்” என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கினர். அதன்பின்னர், அவ்வப்போது வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுக்கொண்டு ஐந்து மாதங்களாக அமைதியாக இருந்த விஜய், ஆகஸ்ட் 22-ல் சிவப்பு, மஞ்சள் நிறத்தில் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தி, முதல் மாநாட்டில் கொள்கைகளை அறிவிப்பதாகத் தெரிவித்தார்.
