அது முடிந்த பின்னர், ராமதாஸ் தரப்பு, அன்புமணி தரப்பு, அரசு தரப்பிடம் விசாரணை நடத்திய நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், ராமதாஸ் மனுவைத் தள்ளுபடி செய்து, அன்புமணி பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை என உத்தரவிட்டார்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இத்தகைய உத்தரவு குறித்து அன்புமணி, “இது நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி” என ட்வீட் செய்திருக்கிறார்.
தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அன்புமணி, “சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை காலை 11:00 மணிக்கு நடைபெறவிருக்கும் பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
திட்டமிட்டபடி பா.ம.க பொதுக்குழுவை நடத்திக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. இது நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு மாமல்லபுரம் கான்ஃபுளுயன்ஸ் அரங்கில் நாளை காலை 11:00 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் எனது தலைமையில் நடைபெறும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து நாளைய கூட்டத்தில் விவாதித்து முடிவெடுப்போம்” என்று பதிவிட்டிருக்கிறார்.
