Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பாஜக தேர்தல் பிரசாரத்தின் ஒருபகுதியே அமலாக்கத்துறை சோதனைகள்: ஆனந்த் சர்மா விமர்சனம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 10, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
பாஜக தேர்தல் பிரசாரத்தின் ஒருபகுதியே அமலாக்கத்துறை சோதனைகள்: ஆனந்த் சர்மா விமர்சனம்
4
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram
anand_sharma_congress

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் தொடர்பான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.

அமலாக்கத்துறை சோதனைகள் குறித்துப் பேசிய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஆனந்த் சர்மா, “சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் குறித்த அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. இவை அனைத்தும் பாஜகவின் தேர்தல் பிரசாரங்களின் ஒருபகுதியே ஆகும்.

எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைப்பதற்காக அரசு நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

பாஜகவின் தேர்தல் பிரிவான அமலாக்கத்துறை எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் செல்கிறது. என்ன வேண்டுமானாலும் குற்றச்சாட்டு சொல்கிறது. தேர்தல் சமயத்தில் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம்.

ஆட்சிக்கு வந்த 2018-ஆம் ஆண்டு முதல் சத்தீஸ்கரின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி  தீவிரமாக உழைத்து வருகிறது. 2018-ல் பெற்ற வெற்றியைப் போல மிகப்பெரிய வெற்றியை சத்தீஸ்கரில் அடைவோம்.” என்று தெரிவித்தார்.

முன்னதாக, நவம்.2-ஆம் தேதி சத்தீஸ்கரில் பல இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அம்மாநில முதல்வர் பூபேஷ் பகேலுக்கு மகாதேவ் சூதாட்ட செயலி நிறுவனத்திடம் இருந்து பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியது.

90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு நவம்.7-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நவம்.17-ஆம் தேதி இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெறஉள்ளது குறிப்பிடத்தக்கது.

.

Previous Post

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஒற்றுமைப் பேரணி: காங்கிரஸ் அறிவிப்பு!

Next Post

தமிழக, பஞ்சாப் கவர்னருக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழக, பஞ்சாப் கவர்னருக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

தமிழக, பஞ்சாப் கவர்னருக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    அமலாக்க துறையின் நடவடிக்கைகள் பிஜேபி இன் தேர்தல் பிரச்சாரமாகவே இருக்கட்டும் தவறு செய்யாதவர்கள் எந்த ஒரு ஏஜென்சிக்கும் பயப்பட வேண்டியதே கிடையாது தைரியமாக இருக்கலாம் தவறு செய்தவர்கள் மட்டுமே இந்த மத்திய அரசு மற்றும் மாநில அரசின் ஏஜென்சிகளை பார்த்து பயப்பட வேண்டியவர்கள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In