Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வந்தாராவில் மெஸ்ஸிக்கு உற்சாக வரவேற்பளித்த ஆனந்த் – ராதிகா தம்பதி… கவனம் ஈர்க்கும் மினிமலிஸ்ட் ஸ்டைல்! | லைஃப்ஸ்டைல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 18, 2025
in அரசியல் செய்திகள்
0
வந்தாராவில் மெஸ்ஸிக்கு உற்சாக வரவேற்பளித்த ஆனந்த் – ராதிகா தம்பதி… கவனம் ஈர்க்கும் மினிமலிஸ்ட் ஸ்டைல்! | லைஃப்ஸ்டைல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:December 18, 2025 10:55 AM IST

இந்த நிகழ்வில், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோர், கருப்பு நிறத்தில் க்ளாசிக்கான ஆடை அணிந்திருந்தது, கவனத்தை ஈர்த்தது.

News18
News18

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரும், அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி, தனது GOAT டூர் பயணத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் பல பகுதிகளுக்கு கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 13) முதல் திங்கட்கிழமை (டிசம்பர் 15) வரை பயணித்தார். இப்பயணத்தில் மும்பை, கொல்கத்தா, டெல்லி சென்ற மெஸ்ஸி தொடர்ந்து கடந்த டிசம்பர் 15ஆம் தேதி குஜராத்தின் ஜாம்நகருக்கு சென்றார்.

அங்கு கால்பந்து உலகக்கோப்பை சாம்பியனான மெஸ்ஸிக்கு, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோர் உற்சாக வரவேற்பளித்து வந்தாரா வனவிலங்கு பாதுகாப்பு மையத்தைச் சுற்றிக்காட்டினர். இவற்றைத் தொடர்ந்து மெஸ்ஸி மற்றும் அவருடன் இந்தியா வந்துள்ள அவரது இண்டர் மியாமி அணியினரான லூயிஸ் ஸ்வரேஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் ஆகியோருக்கு பாரம்பரிய நாட்டுப்புற இசை இசைக்கப்பட்டும், பூ மழை தூவப்பட்டும், மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டும், ஆரத்தி எடுக்கப்பட்டும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இவர்கள் அனைவருடனும் சேர்ந்து ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோர் வந்தாராவிலுள்ள அம்பே மாதா எனப்படும் துர்கை அம்மனுக்கான பூஜைகள், கணேஷ் பூஜை, ஹனுமன் பூஜை, சிவ அபிஷேகம் போன்ற பூஜைகளிலும் மெஸ்ஸி கலந்துகொண்டு இறைவனை தரிசித்தனர். இதையடுத்து அனைவரும் வனவிலங்கு பாதுகாப்பு மையத்தைச் சுற்றிப்பார்த்து, அங்கிருந்த விலங்கு பராமரிப்பாளர்கள், நிபுணர்களுடன் கலந்துரையாடினர். வந்தாராவின் சுற்றுச்சூழல் அழகை நடந்தபடியே அனைவரும் ரசித்து சென்றனர்.

இந்த நிகழ்வில், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோர், கருப்பு நிறத்தில் க்ளாசிக்கான ஆடை அணிந்திருந்தது, கவனத்தை ஈர்த்தது. இதில் ராதிகா, எளிமையான மற்றும் நேர்த்தியான ஒரு டாப் மற்றும் பேண்ட் அணிந்திருந்தார். முழுக்க முழுக்க கருப்பு நிறத்திலான இந்த உடையில், டாப் முழுக்கை நீளத்திலும், பேண்ட் கணுக்கால் வரையிலும் இருந்தது. கழுத்தும், முழுமையாக கவர் ஆகும்படியான டாப் அணிந்திருந்தார் ராதிகா. இத்துடன் மினிமலிஸ்ட்டான ஒரு லுக்கில், சிறியதான ஒரு தோடு, மோதிரம், இயற்கையான மற்றும் லேசான மேக்-அப் என்றிருந்தார். 

அதேபோல ஆனந்த் அம்பானியும் சிம்பிளாக ஒரு கருப்பு நிற ஷர்வானியில் இருந்தார். அவரது ஷர்வானியின் மீதான ஜாக்கெட் பந்த்கலா காலர் வடிவமைப்புடனும், தோள்பட்டை பகுதியில் Pad வேலைப்பாடும், ஆர்னேட் பட்டன்களும் பொறுத்தப்பட்டு, ஒரு பட்டு பாக்கெட்டும் வைக்கப்பட்டிருந்தது. ஆனந்த் மற்றும் ராதிகாவின் இந்த மினிமலிஸ்ட் லுக், தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. 

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். நியூஸ்18 தமிழின் லைஃப்ஸ்டைல் ​​கேட்டகிரியானது, உடல்நலம், உணவு, டிராவல், ஃபேஷன், சமையல் குறிப்புகள் மற்றும் பலவற்றைப் பற்றிய சமீபத்திய தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது.
First Published :

December 18, 2025 10:55 AM IST



.

Previous Post

ஈரான்: மழையால் ரத்த நிறமான கடல்; வியக்க வைக்கும் ஹோர்முஸ் தீவின் அறிவியல் அதிசயம்!

Next Post

Vijay Full Speech | Erode | அண்ணாவும் MGR-ம் எனக்கும் சொந்தம்! | TVK ஈரோடு மாவட்ட மக்கள் சந்திப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Vijay Full Speech | Erode | அண்ணாவும் MGR-ம் எனக்கும் சொந்தம்! | TVK ஈரோடு மாவட்ட மக்கள் சந்திப்பு

Vijay Full Speech | Erode | அண்ணாவும் MGR-ம் எனக்கும் சொந்தம்! | TVK ஈரோடு மாவட்ட மக்கள் சந்திப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In