Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வன விலங்குகளுக்கு சொர்க்கமாக திகழும் ஆனந்த் அம்பானியின் வந்தாரா.. ஆரம்பிக்கப்பட்டது எப்படி?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 14, 2025
in அரசியல் செய்திகள்
0
வன விலங்குகளுக்கு சொர்க்கமாக திகழும் ஆனந்த் அம்பானியின் வந்தாரா.. ஆரம்பிக்கப்பட்டது எப்படி?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வந்தாராவுக்கு வந்த பிரதமர் மோடி அங்கு ஆசிய சிங்கக் குட்டிகளுக்கு உணவளித்து, சிறுத்தை மற்றும் வெள்ளை சிங்க குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்தார். மீட்கப்பட்ட சிம்பன்சிகள், உராங்குட்டன், நீர் யானைகள், முதலைகள் உள்ளிட்டவற்றையும் பிரதமர் பார்வையிட்டார்.

வன நட்சத்திரம் என்று அர்த்தம் கொண்ட வந்தாரா என்ற இந்த விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை இணைந்து தொடங்கியுள்ளது. இதனை ரிலையன்ஸ் குழுமத்தின் சேர்மன் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி நிர்வகித்து வருகிறார்.

குஜராத் மாநிலம் ஜாம் நகரில் 3000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் இந்த வந்தாரா பரந்து விரிந்து காணப்படுகிறது. இதற்குள் வன விலங்குகளுக்கான மருத்துவமனைகள், உடல் நல மையம் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

வந்தாரா சர்வதேச விலங்குகள் அமைப்பான இன்டர்நேஷனல் யூனியன் ஃபார் கன்சர்வேஷன் நேச்சர் (IUCN), உலக வன விலங்குகள் நிதியம் (WWF) ஆகிய அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் வந்தாரா 200-க்கும் அதிகமான யானைகளை மீட்டெடுத்து பராமரித்து வருகிறது.

இதுகுறித்து வந்தாராவை நிர்வகித்து வரும் ஆனந்த் அம்பானி கூறியதாவது- எனக்கு என்னுடைய அம்மா எப்போது சிறந்த இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். எனக்கு 12 வயதாக இருக்கும்போது ஜெய்ப்பூரில் இருந்து ரன்தம்போருக்கு சாலை மார்க்கமாக செல்வோம். அப்போது நான் யானை குட்டிகளை பார்ப்பேன். கொளுத்தும் வெயிலில் யானைகள் தள்ளாடி நடந்து செல்லும்.

அப்போது நான் அம்மாவிடம் அதனை மீட்டு பராமரிக்க வேண்டும் என்று கூறினேன். அதுதான் நாங்கள் பராமரித்த முதல் யானை. அப்போது எங்களுக்கு எப்படி யானைகளை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியாது. யானைகளுக்கு எப்படி உணவு அளிக்க வேண்டும் என்றும் தெரியாது.

அதன்பின்னர் சிறிது சிறிதாக சுமார் 10 ஆண்டுகளில் வந்தாரா வளர்ச்சி அடைந்தது. இப்போது எங்களிடம் தொழில் முறையாக விலங்குகளை பராமரிக்கும் சுமார் 400 நிபுணர்கள் உள்ளனர். சிறந்த முறையில் இப்போது யானைகளை பராமரிக்கிறோம்.

விலங்குகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே இருந்து வந்தது. மனிதர்களின் நலனுக்காக ஏராளமானோர் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் விலங்குகளை கவனிப்பதற்கு ஆட்கள் குறைவாக உள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக எனக்கு அந்த பாக்கியம் கடவுளின் ஆசியால் கிடைத்துள்ளது. அதனால்தான் நான் விலங்குகளுக்கு சேவை செய்கிறேன். இன்று கடவுளை நம்மால் பார்க்க முடியாது. ஆனால் ஒவ்வொரு விலங்குகளிடமும் நான் கடவுளை பார்க்கிறேன். நம் தர்மத்தில் விலங்குகள் உள்ளன. என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க – வனவிலங்கு மறுவாழ்வு மையம் “வந்தாரா”வை திறந்து வைத்த பிரதமர் மோடி!

வந்தாரா விலங்குகள் மீட்பு மறுவாழ்வு மையத்தில் 1 லட்சம் சதுர அடி அளவில் மருத்துவமனையும், ஆய்வு மையமும் உள்ளன. இங்கு ஐசியு, MRI, CT Scan, X-Ray, அல்ட்ரா சண்ட், எண்டோஸ்கோப்பி, டென்டல் ஸ்கேலர் உள்ளிட்ட நவீன மருத்துவ வசதிகள் உள்ளன.

இன்று, வந்தாரா சுற்றுச்சூழல் அமைப்பு 200க்கும் மேற்பட்ட யானைகள், சிறுத்தைகள், புலிகள், சிங்கங்கள், ஜாகுவார் போன்ற 300க்கும் மேற்பட்ட பெரிய பூனைகள், மான்கள் போன்ற 300க்கும் மேற்பட்ட தாவர உண்ணிகள் மற்றும் முதலைகள், பாம்புகள் மற்றும் ஆமைகள் போன்ற 1,200க்கும் மேற்பட்ட ஊர்வனவற்றிற்கு புதிய வாழ்க்கையையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.

First Published :

March 04, 2025 1:41 PM IST



.

Previous Post

மதுரை: எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம்; அனுமதித்த உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம்; பின்னணி என்ன? | madras High court madurai bench order karur temple case

Next Post

‘₹’-க்குப் பதிலாக 'ரூ' குறியீடு: தேசிய சின்னத்தை நிராகரித்துள்ளது திமுக அரசு! -நிர்மலா சீதாராமன்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘₹’-க்குப் பதிலாக 'ரூ' குறியீடு: தேசிய சின்னத்தை நிராகரித்துள்ளது திமுக அரசு! -நிர்மலா சீதாராமன்

‘₹’-க்குப் பதிலாக 'ரூ' குறியீடு: தேசிய சின்னத்தை நிராகரித்துள்ளது திமுக அரசு! -நிர்மலா சீதாராமன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In