Last Updated:
வந்தாராவில் நடைபெறும் விலங்குகள் மறுவாழ்வு பணிகள் தனித்துவமானது. அந்த அழகான இடத்திற்கு மீண்டும் செல்வதற்கு நான் விரும்புகிறேன். – சச்சின்
வன விலங்குகள் பாதுகாப்பில் ஆனந்த் அம்பானியின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என்று சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார். வந்தாராவின் செயல்பாடுகள் குறித்தும் சச்சின் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
வன நட்சத்திரம் என்று அர்த்தம் கொண்ட வந்தாரா என்ற இந்த விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை இணைந்து தொடங்கியுள்ளது. இதனை ரிலையன்ஸ் குழுமத்தின் சேர்மன் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி நிர்வகித்து வருகிறார்.
குஜராத் மாநிலம் ஜாம் நகரில் 3000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் இந்த வந்தாரா பரந்து விரிந்து காணப்படுகிறது. இதற்குள் வன விலங்குகளுக்கான மருத்துவமனைகள், உடல் நல மையம் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
வந்தாராவின் சேவைகளை அங்கீகரித்துள்ள மத்திய அரசு அதற்கு பிராணி மித்ரா என்ற உயரிய விருதை வழங்கி கவுரவித்துள்ளது. வந்தாரா விலங்குகள் மீட்பு மறுவாழ்வு மையத்தில் 1 லட்சம் சதுர அடி அளவில் மருத்துவமனையும், ஆய்வு மையமும் உள்ளன. இங்கு ஐசியு, MRI, CT Scan, X-Ray, அல்ட்ரா சண்ட், எண்டோஸ்கோப்பி, டென்டல் ஸ்கேலர் உள்ளிட்ட நவீன மருத்துவ வசதிகள் உள்ளன.
வந்தாராவை கடந்த ஞாயிறு அன்று பார்வையிட்ட பிரதமர் மோடி, அதுகுறித்த தனது அனுபவத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் சுமார் 7 நிமிடங்கள் ஓடும் வந்தாரா குறித்த வீடியோவையும் பிரதமர் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், பிரதமரின் பதிவுகளை ரீ ட்வீட் செய்து பிரபலங்கள் பலரும் ஆனந்த் அம்பானியை பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது-
வந்தாரா குறித்த அனுபவங்களை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அவர் உணர்ந்ததைத் தான் நானும் வந்தாரா சென்றிருந்தபோது உணர்ந்தேன். வன விலங்குகளை பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்பதற்காக ஆனந்த் அம்பானி அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார். அவரது முயற்சிகள் பாராட்டத்தக்கது.
I felt the same as Hon’ble PM @narendramodi ji, when I was in Vantara earlier. The passion and commitment of Anant and his team towards wildlife conservation, is commendable.
The rescued and rehabilitated animals at Vantara touch you in a unique way and I look forward to… https://t.co/TuU98nCby1
— Sachin Tendulkar (@sachin_rt) March 5, 2025
வந்தாராவில் நடைபெறும் விலங்குகள் மறுவாழ்வு பணிகள் தனித்துவமானது. அந்த அழகான இடத்திற்கு மீண்டும் செல்வதற்கு நான் விரும்புகிறேன். என்று கூறியுள்ளார். சச்சினின் இந்த பதிவு தற்போது வைரலாகியுள்ளது.
March 05, 2025 7:06 PM IST
‘வன விலங்குகள் பாதுகாப்பில் ஆனந்த் அம்பானியின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது’ – சச்சின் டெண்டுல்கர் புகழாரம்

