Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

எம்.எல்.ஏ. கன்னத்தில் பளார் விட்ட எதிர்க் கட்சி தொண்டர்… ஆந்திராவில் வாக்குப்பதிவின்போது பரபரப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 14, 2024
in அரசியல் செய்திகள்
1
எம்.எல்.ஏ. கன்னத்தில் பளார் விட்ட எதிர்க் கட்சி தொண்டர்… ஆந்திராவில் வாக்குப்பதிவின்போது பரபரப்பு
24
SHARES
39
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஆந்திர மாநிலத்தில்  தேர்தலின் போது,  இரு கட்சிகளை சேர்ந்தவர்கள் மாறி மாறி தாக்கிக் கொண்ட காட்சிகள் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன. அங்கு ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினரான சிவகுமார் இந்த முறை மீண்டும் தெனாலி தொகுதியில் போட்டியிடுகிறார்.

வாக்குப்பதிவின் போது,  தெனாலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட  வாக்கு சாவடி ஒன்றுக்கு சென்ற சிவகுமாருக்கும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களுக்கும்  இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ. சிவக்குமார், எதிர்கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவரின் கன்னத்தில் அறைந்தார். இதை சற்றும் எதிர்பாராத அவர், சிவக்குமாரை  திருப்பி அடித்தார். அப்போது இருதரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து தகராறுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

VIDEO| Lok Sabha Elections 2024: YSRCP leader VS Shivakumar engaged in a slapping battle with a voter at a polling booth of Andhra Pradesh’s Guntur. #LSPolls2024WithPTI #LokSabhaElections2024

(Full video available on PTI Videos – https://t.co/n147TvqRQz) pic.twitter.com/SB9gqgmsGp

— Press Trust of India (@PTI_News) May 13, 2024

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடத்தப்படும் இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து 2 கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், இன்று 4 ஆவது கட்டமாக 96 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் வாக்குப்பதிவுகள் நடத்தப்பட்டன. அதிலும் குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல் ஒரே நேரத்தில் இன்று நடந்தது. அங்குள்ள 25 மக்களவை தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப் பதிவில், வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

2019 இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் ஜெகன் கட்சியை எதிர்த்து பாஜக, தெலுங்கு தேச கூட்டணி கடும் போட்டி கொடுத்து வருகிறது.

.

Previous Post

கட்டணம் கேட்ட சுங்கச்சாவடி பெண் ஊழியரை இடித்துச் சென்ற கார்!

Next Post

ராகுல் காந்தி உறுதி – “ஜூலை 1-ம் தேதி ஏழைப் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ஒரு மேஜிக் நிகழ்ந்திருக்கும்!”

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ராகுல் காந்தி உறுதி – “ஜூலை 1-ம் தேதி ஏழைப் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ஒரு மேஜிக் நிகழ்ந்திருக்கும்!”

ராகுல் காந்தி உறுதி - "ஜூலை 1-ம் தேதி ஏழைப் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ஒரு மேஜிக் நிகழ்ந்திருக்கும்!"

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    எம்எல்ஏ தொண்டரை அடித்துள்ளார் தொண்டர் திருப்பி அடித்து உள்ளார் இதில் ஒன்றும் தவறு கிடையாது எம் எல் ஏ கை நீட்டுவதை நிறுத்த வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In