Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

விசாரணைக்கு ஆஜராகாத அமலாக்கத்துறை உதவி இயக்குநர் : போலீஸ் எடுத்து முக்கிய முடிவு..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 26, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
விசாரணைக்கு ஆஜராகாத அமலாக்கத்துறை உதவி இயக்குநர் : போலீஸ் எடுத்து முக்கிய முடிவு..!
20
SHARES
32
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (டிசம்பர் 26) விசாரணைக்கு ஆஜராகாததால் மீண்டும் சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

திண்டுக்கல் மருத்துவரிடம் இருந்து ரூ.20 லட்சம் லஞ்சம் பெறும் போது அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அவரை சிறையில் அடைத்தது.

பின்னர் அங்கித் திவாரியை 3 நாட்கள் காவலில் எடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர். இதனிடையே அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. குறிப்பாக அங்கித் திவாரி மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்ற அடிப்படையில் அமலாக்கத்துறையே வழக்குப் பதிவு செய்து விசாரணையை தற்போது தொடங்கியுள்ளது.

இதனிடையே அங்கித் திவாரி கைதான அன்றைய தினம் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பணி செய்ய விடாமல் தடுத்ததாக மதுரை தல்லாக்குளம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும் இந்த வழக்கில் மதுரை மண்டல அமலாக்கத்துறை உதவி இயக்குநர் பிரிஜேஷ் பெனிவால் உட்பட அதிகாரிகள் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால் இன்றைய தினம் விசாரணைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜராகவில்லை. எனவே அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப மதுரை தல்லாக்குளம் காவல்துறை முடிவு செய்துள்ளது.

Previous Post

பாஜகவின் செயல்பாடுகள் ராமரின் போதனைகளுக்கு நேர் எதிரானவை: கபில் சிபல்

Next Post

நாம் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்காக பாடுபடுகிறோம், ஆனால் சரியான தகன வசதிகளை கூட கொடுக்க முடியவில்லை – உயர்நீதிமன்றம் காட்டம்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாம் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்காக பாடுபடுகிறோம், ஆனால் சரியான தகன வசதிகளை கூட கொடுக்க முடியவில்லை – உயர்நீதிமன்றம் காட்டம்.

நாம் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்காக பாடுபடுகிறோம், ஆனால் சரியான தகன வசதிகளை கூட கொடுக்க முடியவில்லை - உயர்நீதிமன்றம் காட்டம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In