பல்லாவரம் – திரிசூலம் இடையே மின்சார ரயில் 20 நிமிடமாக நிறுத்தப்பட்டதால் அதிலிருந்த பயணிகள் இறங்கி தண்டவாளத்தில் நடந்து சென்றனர்.
தாம்பரம்- சென்னை கடற்கரை இடையேயான புறநகர் மின்சார ரயில் சேவை இன்று(ஜன.5) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைமேம்பால பணிகள் நடைபெற உள்ளதால் ரத்து என தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.
இந்த நேரத்தில் பல்லாவரம்-கடற்கரை, செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
