Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அரசுக்கு ரூ. 12,000 கோடி கூடுதல் செலவினம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 26, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அரசுக்கு ரூ. 12,000 கோடி கூடுதல் செலவினம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக இந்த ஆண்டு நம்முடைய அரசு 12,000 கோடி ரூபாயை வழங்கியிருக்கிறது. மத்திய அரசு, ஒருவேளை நாம் கேட்டுக்கொண்டிருக்கக்கூடிய வகையில் இத்திட்டத்திற்கான நிதியை வழங்கியிருக்குமேயானால், நம்முடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருக்குமேயானால், நியாயத்திற்கு செவிசாய்த்திருக்குமேயென்றல், இந்த ரூ. 12,000 கோடியை நாம் நம்முடைய சொந்த நிதியிலிருந்து இந்தத் திட்டத்திற்கு செலவழிக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.

உறுப்பினர்கள் எல்லோரும் பல்வேறு திட்டங்களை கேட்கிறீர்களே! நான் ஒரு புள்ளிவிவரத்தைச் சொல்கிறேன்; மாறாக இந்த ரூ. 12,000 கோடியை இந்தத் திட்டத்திற்காக செலவழிப்பதற்குப் பதிலாக அரசினுடைய மற்ற திட்டங்களுக்கெல்லாம் நாம் ஒதுக்கீடு செய்து செலவழிந்திருந்தால், அதன்மூலமாக 25,000 புதிய பேருந்துகளை நாம் வாங்கியிருக்கலாம்; நம்முடைய மாநிலத்தில் இருக்கக்கூடிய பேருந்துகளின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்தியிருக்கக்கூடிய வாய்ப்பை நாம் பெற்றிருக்க முடியும். அதேபோன்று 30,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு நாம் கிராமச் சாலைகளை அமைத்து முடித்திருக்கலாம்.

நம்முடைய முதலமைச்சர், ரூ. 4,000 கோடி செலவில் 10,000 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கிறோம் என்று அறிவித்திருக்கிறார் என்றால், அந்த 10,000 கிலோ மீட்டர் சாலை என்பது 30,000 கிலோ மீட்டர் சாலையாக உயர்ந்து, நீங்கள் கேட்கக்கூடிய அத்தனை இடங்களிலும் சாலைகள் அமைக்கக்கூடிய வாய்ப்பை தமிழ்நாடு அரசு பெற்றிருக்க முடியும்.

அதேபோன்று 3½ இலட்சம் வீடுகளை நாம் புதிதாகக் கட்டியிருக்க முடியும். 50,000 புதிய வகுப்பறைகளை நம்முடைய பள்ளிகளிலே நாம் உருவாக்கியிருக்க முடியும். ஆக இந்த ரூ. 12,000 கோடியை நாம் இழந்திருக்கிறோமோமென்றால்; இல்லை, இத்தனை திட்டப் பணிகளையும் அதனுடன் சேர்த்தே நாம் இழந்திருக்கிறோம் என்பதை இந்த நாட்டு மக்களுக்கும், இந்த அவைக்கும் நான் கவனப்படுத்த விரும்புகிறேன் என்று அமைச்சர் பேசினார்.



.

Previous Post

Pixel 9: புதிய பிக்சல் 9 சீரிஸ் போன்கள் இந்த நாளில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூகுள் வெளியிட்ட வீடியோ டீஸர்-a video teaser released by google suggests that the new pixel 9 series phones will be launched on that day

Next Post

குழந்தைகளுடன் சென்னையில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் – 360 டிகிரி டோம் தியேட்டர்! | Chennai 360 degree dome theatre – perfect places to take your kids this weekend – timings, entry fee, location

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
குழந்தைகளுடன் சென்னையில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் – 360 டிகிரி டோம் தியேட்டர்! | Chennai 360 degree dome theatre – perfect places to take your kids this weekend – timings, entry fee, location

குழந்தைகளுடன் சென்னையில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் – 360 டிகிரி டோம் தியேட்டர்! | Chennai 360 degree dome theatre – perfect places to take your kids this weekend – timings, entry fee, location

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In