அதுகுறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘நான் தனி மனிதன்.. யாரிடமும் வேலை செய்யவில்லை’ என்றார். இதேபோல் பா.ஜ.க-வின் பூத் வலிமைப்படுத்தும் பயணத்திலும் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை. ஆனால் எடப்பாடி கருத்துக்கு மட்டும் முதல் ஆளாக ஓடி வந்து பதில் சொல்கிறார். இதன் மூலமே அவரது நோக்கம் தெளிவாகிவிட்டது. இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கூட்டணியை உடைக்கும் வேலைகளை அண்ணாமலை செய்வார். இப்படியான சூழலில் பா.ஜ.க கூட்டணியில் தொடர வேண்டுமா என எடப்பாடிதான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.
‘கூட்டணி ஆட்சி விவகாரத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க உறவு சீக்கிரமே முறியும்’ என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன. அதற்கு ஏற்றார் போலவே அவர்களின் நகர்வுகளும் இருக்கின்றன. என்ன நடக்கப்போகிறது என்பது விரைவில் தெரிந்துவிடும்!
