சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசி வருகிறார்.
சென்னைக்கு வியாழக்கிழமை இரவு வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, கிண்டியில் உள்ள தனியாா் ஹோட்டலில் தங்கியுள்ளாா். 2026 பேரவைத் தோ்தல் கூட்டணி வியூகம் குறித்து பாஜக மூத்த தலைவா்களுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.
இன்று காலை ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்துப் பேசிய அமித் ஷா, பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனை சந்தித்துப் பேசினார்.
தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அமித் ஷாவின் சந்திப்பு நடைபெற்று வருகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகும் என்று கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க அமித் ஷா இதுவரை நேரம் கொடுக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
