Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“காவல்துறை அனுமதியின்றி புல்வெளிக்கு அழைத்து சென்றுள்ளனர்…” – அமித் ஷா விளக்கம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 27, 2025
in அரசியல் செய்திகள்
0
“காவல்துறை அனுமதியின்றி புல்வெளிக்கு அழைத்து சென்றுள்ளனர்…” – அமித் ஷா விளக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:April 25, 2025 7:10 AM IST

பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அமித் ஷாஅமித் ஷா
அமித் ஷா

பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்த பகுதிக்கு காவல்துறை அனுமதியின்றி சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாத தாக்குதலால் 28 இந்திய சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உலக தலைவர்களும் இந்தியாவிற்கு தங்கள் ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள்.

இதனையடுத்து சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, இந்தியா – பாகிஸ்தான் எல்லையாக பஞ்சாபில் அமைந்துள்ள அட்டாரி – வாகா சோதனைச் சாவடி மூடல் என்பது போன்ற முடிவுகள் இந்திய அரசால் எடுக்கப்பட்டது. இதையடுத்து ஷிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ள பாகிஸ்தான், இந்த செயலை போர் தொடுத்ததாகவே கருதுவோம் என கூறியுள்ளது. மேலும் இந்தியாவிற்காக வான்பரப்பு மூடப்படுவதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்தியாவுடனான வணிக நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளது.

இந்த நிலையில் நேற்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல் சம்பவம் பற்றி மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்த கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன. அதில், தாக்குதல் சம்பவம் நடந்த பைசரன் புல்வெளியைத் திறக்க அனுமதி இல்லை என்றும் காவல்துறை அனுமதியின்றி சுற்றுலாப் பயணிகள் புல்வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் சம்பவம் அரங்கேறிய இடத்திற்கு நடந்து அல்லது குதிரை மூலம் மட்டும் பயணம் செய்ய முடியும் என்பதால்தான் பாதுகாப்புப் படையினர் அங்கு செல்ல தாமதம் ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்துள்ளார்.

தாக்குதலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு வரை பைசரனில் இருந்து 50 கிலோமீட்டர் சுற்றளவில் எந்த தகவல் தொடர்பு சிக்னலையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தீவிரவாதிகள் எந்த தகவல் தொடர்பு சாதனத்தையும் பயன்படுத்தவில்லை என்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First Published :

April 25, 2025 7:00 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

பஹல்காம் தாக்குதல் எப்படி நடந்தது? மீட்பு பணிகள் தாமதமானது ஏன்? – அனைத்து கட்சி கூட்டத்தில் உள்துறை அமைச்சகம் விளக்கம்



.

Previous Post

அமலாக்கத்துறை கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!

Next Post

மேட்டூர் அணை நிலவரம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நிலவரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In