Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘பாஜக பக்கம் சாயும் அதிமுக?’ – அமித் ஷா, எடப்பாடி சந்திப்பின் பரபர பின்னணி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 28, 2025
in அரசியல் செய்திகள்
0
‘பாஜக பக்கம் சாயும் அதிமுக?’ – அமித் ஷா, எடப்பாடி சந்திப்பின் பரபர பின்னணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தொடர்ந்து, `சசிகலா, டி.டி.வி, ஓ.பி.எஸ் போன்றவர்களை அ.தி.மு.க-வில் இணைக்க தான் தயாராக இல்லை. ஆனால் கூட்டணி அமைந்தால், மொத்தமாகக் குறிப்பிட்ட சீட்டை பா.ஜ.க-வுக்கு என ஒதுக்கி விடுகிறேன். அதிலிருந்து நீங்கள் அவர்களுக்குப் பிரித்துக்கொடுத்துவிடுங்கள். அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி குறித்து உடனே அறிவிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

இதையெல்லாம் கவனமாகக் கேட்ட அமித்ஷா, `கூட்டணி குறித்து மட்டும் உடனே அறிவித்துவிடலாம்’ எனச் சொல்லியிருக்கிறார். அதற்குப் பதிலளித்த எடப்பாடி & கோ, “ஜூன் மாதத்திற்குப் பிறகு அறிவிக்கலாம். அதுதான் சரியாக இருக்கும்” எனத் தெரிவித்திருக்கிறார். இப்படியாக அந்த சந்திப்பு நடந்து முடிந்திருக்கிறது.

இதன் மூலம் தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி கனிந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும். இதை அமித்ஷாவின் எக்ஸ் பதிவும் உறுதி செய்கிறது.

குபேந்திரன்

குபேந்திரன்

இந்த சூழலில்தான் அண்ணாமலை டெல்லி சென்றிருக்கிறார். அவர் நட்டா, அமித் ஷாவைச் சந்தித்துப் பேசுகிறார். அண்ணாமலை தலைவராக நீடிப்பதுதான் இப்போது பெரிய விவாதமாக இருக்கிறது. ஜூன் மாதம் வரையில் அவரை வைத்திருந்துவிட்டு, பிறகு மாற்றம் செய்கிறார்களா? அல்லது உடனே மாற்றம் செய்யப் போகிறார்களா எனத் தெரியவில்லை.

பா.ஜ.க-வில் ஒரு பதவியில் இருப்பவரின் அதிகாரம் குறைக்கப்படுவது அவ்வளவு எளிதில் நடக்காது. இதற்கு முன்பு தலைவராக இருந்த முருகன் மீது கூட சில குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன. இதையடுத்துதான் அவரை மத்திய அமைச்சராக்கினார்கள். அண்ணாமலை விவகாரத்தில் உடனே அவரை மாற்றினால் எடப்பாடிக்கு மைலேஜ் கிடைக்கும். கூடவே கூட்டணிக்கும் பலம் கிடைக்கும். அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணிக்கு நாம் தமிழர் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அவர்கள் கூடுதல் இடங்களைக் கேட்டு நெருக்கடி கொடுத்தார்கள் என்றால், விஜய் வந்துவிடுவார். இதனால் வரும் காலங்களில் தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பாக இருக்கும்” என்றார்.

மறுபக்கம், அமித் ஷா நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்னனை சந்தித்து பேசி இருக்கிறார். தமிழக பாஜகவில் சில அதிரடி விஷயங்கள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைவராக அண்ணாமலையை வைத்துகொண்டு, கூட்டணி தேர்தல் விவகாரங்களில் மற்ற கட்சிகளிடம் பேச ஒரு ஒருங்கிணைப்பு குழுவை ஏற்படுதலாம், அதில் அதிமுகவுடன் சுமூகமாக செல்லும் தமிழக நிர்வாகிகள் இடம் பெறுவார்கள் என்ற திட்டமும் பாஜக தரப்பில் இருக்கிறது.

மறுபக்கம், திமுக கூட்டணியோ, பாஜக அதிமுக கூட்டணி அமைந்தால், 2026 தங்களுக்கு எளிதாகிவிடும் என்றும் சொல்கிறார்கள். தேர்தல் காலம் நெருங்க நெருங்க இன்னும் பல அரசியல் மூவ்கள் அரங்கேறும்.!



.

Previous Post

விஷமிகளின் செயல்: போஸ்டர் சர்ச்சை பற்றி ஆனந்த்!

Next Post

Gold Rate Today: 67 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! ஒரே நாளில் 840 ரூபாய் உயர்வு! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Gold Rate Today: 67 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! ஒரே நாளில் 840 ரூபாய் உயர்வு! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Gold Rate Today: 67 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! ஒரே நாளில் 840 ரூபாய் உயர்வு! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In