Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Israel: “ஒரு மாதத்துக்குள் செய்ய வேண்டும், இல்லையென்றால்…'' – இஸ்ரேலை எச்சரித்த அமெரிக்கா!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 17, 2024
in அரசியல் செய்திகள்
0
Israel: “ஒரு மாதத்துக்குள் செய்ய வேண்டும், இல்லையென்றால்…'' – இஸ்ரேலை எச்சரித்த அமெரிக்கா!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இஸ்ரேல் – ஹாமஸ் இடையே தொடங்கிய போர், ஒரு வருடத்தைக் கடந்தும் தொடர்வதால், பாலஸ்தீனம் குறிப்பாக காஸா கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆயிரகணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். லட்சகணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தண்ணீர், உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வெண்டும் என சர்வதேச நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

மேத்யூ மில்லர்
Israel : `அத்துமீறி லெபனானில் நுழைந்த இஸ்ரேல் டேங்கர்கள்’ – ஐக்கிய அமைதிப் படை குற்றச்சாட்டு!

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களில் உள்ள உலக உணவுத் திட்டத்தின் (WFP) தலைவரான அன்டோயின் ரெனார்ட் (Antoine Renard) “வடபகுதியில் உள்ள மக்கள் வெளியிலிருந்து வரும் உதவியை மட்டுமே நம்பியிருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த சூழலிலும், இஸ்ரேல் அரசு மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து தடுத்து வருகிறது.

இந்த நிலையில் தான் அமெரிக்கா இஸ்ரேலை எச்சரித்திருக்கிறது. அமெரிக்காவின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், “ சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் அரசுக்கு அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் அந்தோனி பிளிங்கன் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அந்த கடிதத்தில், ‘போர் பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என இஸ்ரேலிய ராணுவத்தின் உத்தரவுகளால், சுமார் 1.7 மில்லியன் மக்கள், குறுகிய, கடலோர அல்-மவாசி பகுதிக்கு கட்டாயமாக புலம்பெயர வைக்கப்பட்டிருக்கின்றனர். அங்கு அவர்கள் தீவிர நெரிசல் காரணமாக, அதிக அபாயகரமான தொற்றுநோய்களால் பாதிக்கப்படிருக்கின்றனர்.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் | போர் பதற்றம்
நேற்று காஸா, இன்று லெபனான், நாளை ஈரான்? – நெதன்யாகுவின் அடங்காத போர் வெறியும் தாக்கமும்

ஆனால், இஸ்ரேலிய அரசு, வணிக இறக்குமதியை நிறுத்துதல், வடக்கு மற்றும் தெற்கு காஸாவுக்கிடையில் கிட்டத்தட்ட 90% மனிதாபிமான இயக்கங்களை தடை செய்தல், புதிய சோதனை சாவடிகள், கடுமையான நடவடிக்கைகளை உருவாக்குதல் ஆகிய செயல்களால், காஸாவின் நிலைமையை பெரும் சிக்கலுக்குள் தள்ளியிருக்கிறது. தற்போது காஸாவுக்கு சில மனிதாபிமான உதவிகள் சென்றடைந்தாலும், அது போதுமானதாக இல்லை. எனவே, நாங்கள் விரைவான மாற்றத்தைக் காண விரும்புகிறோம். ஒரு மாதத்துக்குள் காஸாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்காவிட்டால், இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டுவரும் ராணுவ ஒத்துழைப்பு ரத்து செய்யப்படும். இது தவிர மேலும் பல விளைவுகளை இஸ்ரேல் சந்திக்க நேரிடலாம்.’ எனக் குறிப்பிட்டிருக்கிறது. எனவே, இஸ்ரேல் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



.

Previous Post

Black Market-ல் TASMAC சரக்கு: காலையில் திறக்கப்பட்ட Wineshop | Action Report | Vikatan Exclusive

Next Post

மத்திய அமைச்சா் சுரேஷ் கோபி ஜாமீன் கோரி மனு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மத்திய அமைச்சா் சுரேஷ் கோபி ஜாமீன் கோரி மனு

மத்திய அமைச்சா் சுரேஷ் கோபி ஜாமீன் கோரி மனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In