Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Ambedkar Book Launch: “2026-ல் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும்" – புத்தக வெளியீட்டில் ஆதவ் அர்ஜுனா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 7, 2024
in அரசியல் செய்திகள்
0
Ambedkar Book Launch: “2026-ல் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும்" – புத்தக வெளியீட்டில் ஆதவ் அர்ஜுனா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத தேசிய தலைவர் அம்பேத்கரின் அனைத்து பரிமாணங்களையும் பேசும் `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தொகுப்பு நூலை, அவரின் நினைவு நாளில் விகடன் பிரசுரமும், வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனமும் இணைந்து வெளியிடுகிறது. இந்நூலின் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

Ambedkar Book Launch | Vikatan

இந்த நிகழ்ச்சியில், நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய், மேனாள் நீதிபதி சந்துரு, அம்பேத்கரின் பேரனும் சமூக செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே, விசிக துணைப் பொதுச்செயலாளரும், வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனருமான ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில், விஜய் நூலை வெளியிட சந்துரு அதைப் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் புத்தக உருவாக்கவுரையாற்றிய ஆதவ் அர்ஜுனா, “ஆதிக்கத்தை எதிர்க்கக்கூடியவர்கள் எல்லோருக்கும் புதிய எதிரிகள் உருவாகிக் கொண்டுதான் இருப்பார்கள். கால சூழ்நிலைகள் தலித் மக்களின் விலங்குகளை உடைக்கும். மன்னர் பரம்பரை உருவாகத் தமிழகம் இனி ஒருபோதும் இடம் தராது. விஜய்க்கு அரசியல் தெரியுமா, கொள்கைகள் தெரியுமா என்று கேட்கிறார்கள். கொள்கைகளைப் பேசிய பல கட்சிகள் ஏன் அம்பேத்கரை இதுவரைக்கும் மேடையில் ஏற்றவில்லை. 2026-க்கான பணிகள் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். இங்கு பிறப்பால் ஒரு முதலமைச்சர் உருவாக்கப்படக்கூடாது. தமிழகத்தை கருத்தியல் தலைவர்தான் ஆளவேண்டும். குடும்ப ஆட்சி, ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகளைக் கூறி 2014-ல் பா.ஜ.க வென்றார்கள். இன்றைக்கு வரைக்கும் பா.ஜ.க-வை யாராலும் வெல்ல முடியவில்லை. ஆனால், தமிழகத்தில் ஊழலை நாம் கடந்து சென்றுகொண்டிருக்கிறோம். தமிழகத்தில் மத பெரும்பான்மைவாதத்தை முடித்தாகிவிட்டது. தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு இரண்டு சதவிகிதத்துக்கு மேல் கிடையாது.

ஆதவ் அர்ஜுனா

ஆனால், தமிழகத்தில் ஒரு பொதுத் தொகுதியில் ஒரு தலித்தை இன்றைக்கும் நிற்கவைக்க முடியவில்லை. 2011 தரவுகள் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஒரு கோடியே நாற்பது லட்சம் தலித்துகள் இருக்கிறார்கள். ஆனால், ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று கேட்டால் தவறு என்று சொல்கிறார்கள். எல்லோரும் சமம் என்று சொல்வது தான் திராவிடம். தமிழ் தேசியமும் அதைத்தான் சொல்கிறது. இங்கு சாதியின் அடிப்படையில் உருவாகக்கூடிய தேர்தல் அரசியல் தான் பிரச்சனை. வேங்கைவயல் பிரச்சனை இன்றைக்கு வரைக்கும் தீர்க்க முடியாததாக இருக்கிறது. சாதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ, அமைச்சர்கள்தான். இதில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்கப்படாததற்குக் காரணம். உங்களுக்கு 25 சதவிகிதம்தான் இருக்கிறது அதை வைத்துக்கொண்டு எப்படி நீங்கள் பெரிய கட்சி என்று சொல்ல முடியும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி உருவாக வேண்டும். அதில் தலித் மக்கள் பங்கு பெற வேண்டும். மன்னராட்சியைக் கேள்வி கேட்டால் உடனே சங்கி என்று சொல்வார்கள். நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் தமிழக மக்கள் புதிய அரசியலை உருவாக்க முடிவெடுத்து விட்டார்கள்.” என்று கூறினார்.

Ambedkar Book Launch | Vikatan: “அம்பேத்கர் இசைஞானி இளையராஜாவைப் போன்றவர்தான்!”- ராப் பாடகர் அறிவு



.

Previous Post

மருத்துவ பட்டப்படிப்புக்கு ரூ.70,000.. 14 போலி மருத்துவர்கள் கைது.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்! – News18 தமிழ்

Next Post

விஜய் பேசியதில் உடன்பாடு இல்லை! -திருமாவளவன்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விஜய் பேசியதில் உடன்பாடு இல்லை! -திருமாவளவன்

விஜய் பேசியதில் உடன்பாடு இல்லை! -திருமாவளவன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In