Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திமுக கூட்டணி : அதிகரிக்கும் தோழமைகளின் கண்டிப்புகளும் பின்னணியும்! | allies fighting with the DMK, what happening in alliance

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 3, 2025
in அரசியல் செய்திகள்
0
திமுக கூட்டணி : அதிகரிக்கும் தோழமைகளின் கண்டிப்புகளும் பின்னணியும்! | allies fighting with the DMK, what happening in alliance
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இதற்கு முன்பும் அண்ணா பல்கலை விவகாரம், சாம்சங் விவகாரம் என தொடர்ச்சியாக தி.மு.க அரசுக்கு எதிராக அதன் கூட்டணி கட்சிகளின் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அதிமுக போராட்டத்தின் முக்கிய கோஷமே, `யார் அந்த சார்?’ என்பது தான். யார் அந்த சார் அன்பது குறித்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும் என கூட்டணியில் இருக்கும் திருமாவளவனும் சொல்லி இருக்கிறார்.

இது வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணியில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து சில அரசியல் ஆர்வலர்களிடையே பேசுகையில், “திமுக அரசின் நிர்வாகத்தில் சில சிக்கல்கள் எழும் போது கூட்டணி கட்சிகள் மீதும், `வேடிக்கை பார்ப்பதாக’ விமர்சனம் வைக்கப்படும். அதனை தவிர்க்க கூட்டணி கட்சிகளும் முக்கிய வழக்குகளில் தங்களின் கண்டனத்தை தெரிவிப்பார்கள். தமிழ்நாட்டில் கூட்டணியின் முக்கியத்துவத்தை பெரிய கட்சிகள் அனைத்தும் அறிந்து தான் உள்ளன. அதிமுக கூட வலுவான கூட்டணியை அமைப்போம் என்று தான் சொல்லி வருகிறார்கள். புதியதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய்யும், ஆட்சியில் பங்கு என கூட்டணி கணக்கோடு தான் தொடங்கினார். திமுக-வுக்கும் இது தெரியும். கூட்டணியாக வலுவாக உள்ள திமுக தரப்பு கூட்டணியை அத்தனை எளிதில் விட்டு விடாது. பாஜக எதிர்ப்பு என்னும் ஆயுதத்தை கையில் எடுத்து கூட்டணியை தக்கவைக்கவே முயற்சிக்கும். ” என்கிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் நியாயமான விஷயங்களுக்குதான் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அப்படி செய்யவில்லையென்றால் தி.மு.க ஆட்சியில் நடக்கும் தவறுகளையெல்லாம் அதன் கூட்டணி கட்சிகள் வேடிக்கை பார்க்கின்றன என்கிற விமர்சனத்தை சந்திக்கும் நிலை ஏற்படும். ஆனால் இதன் காரணமாக கூட்டணியில் பாதிப்பு ஏற்படுமா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் இவர்கள் பா.ஜ.கவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக ‘இந்தியா’ கூட்டணி என்கிற ஒன்றை குடையின் கீழ் இணைத்துள்ளனர். எனவே தேர்தல் நெருங்கும் நேரத்தில்தான் யார், யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பது தெரியும்” என்றார்.



.

Previous Post

பொங்கல்: தாம்பரம் – திருச்சி சிறப்பு ரயில்!

Next Post

TOP 10 NEWS: வீட்டுக்கு வரும் பொங்கல் பரிசு டோக்கன்! உச்சம் தொட்ட தங்கம் விலை! டாப் 10 நியூஸ்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TOP 10 NEWS: வீட்டுக்கு வரும் பொங்கல் பரிசு டோக்கன்! உச்சம் தொட்ட தங்கம் விலை! டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: வீட்டுக்கு வரும் பொங்கல் பரிசு டோக்கன்! உச்சம் தொட்ட தங்கம் விலை! டாப் 10 நியூஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In