அமித்ஷாவின் கருத்துக்கு பதில்
அமித்ஷா, “அதிமுக தலைமையில் NDA ஆட்சி அமையும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு இருக்கும்” என்று கூறியதற்கு, தம்பிதுரை, “எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாகக் கூறியுள்ளார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பதிவே இல்லை,” என்று பதிலளித்தார். தேர்தல் கூட்டணி வேறு, ஆட்சி அமைப்பது வேறு என்று விளக்கிய அவர், “2026-இல் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றாலும், ஆட்சி அதிமுக தனித்தே அமைக்கும்,” என்று மீண்டும் வலியுறுத்தினார்.
