Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`சம்பாதிக்கும் பணமெல்லாம் குடிநீர் வாங்கவே செலவாகிறது' – க.தர்மத்துப்பட்டி கிராம மக்கள் வேதனை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 22, 2024
in அரசியல் செய்திகள்
0
`சம்பாதிக்கும் பணமெல்லாம் குடிநீர்  வாங்கவே  செலவாகிறது' –   க.தர்மத்துப்பட்டி கிராம மக்கள் வேதனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திண்டுக்கல் மாவட்டம், க.தர்மத்துப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. சில வருடங்களாகவே ஊராட்சி நிர்வாகம், குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கான தண்ணீரினை சரியாக அளிப்பதில்லை என்ற புகார் உள்ளது. உள்ளூர் பொதுமக்கள் இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்த பாடில்லை. அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் அதிகமான அளவில் உள்ள இந்த கிராமத்தில் குறைந்த அளவே குடிநீர் குழாய்கள் இணைப்பு இருந்து வந்தது. அதனால் சில மாதங்களுக்கு முன்பு ஒவ்வொரு தெருவுக்கும் வீடு வீடாக குடிநீர் இணைப்பு போட குழாய் பதிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அந்த பணி முழுமை அடையாமல் பாதியிலேயே நிற்கிறது.

பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்ட குழாய் பதிக்கும் வேலையினால் ஒவ்வொரு தெருவிலும் பொதுமக்கள் நடப்பதற்கும் வாகனங்கள் செல்வதற்கும் சிரமமாகவே உள்ளது. குடிநீர் தேவையை சரி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட வேலையும் பாதியில் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர். மேலும் அன்றாட கூலி வேலைக்குச் சென்று தங்கள் தேவைகளை சரி செய்து கொள்ளும் கிராம மக்கள், குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துவது மிகவும் வருந்தக்கூடிய செயலாகும்.

இது குறித்து பொதுமக்கள் கூறியபோது, “எங்களது சம்பளத்தில் ஒரு பகுதி அளவு குடிநீர் வாங்க உபயோகித்து விட்டால்… மற்ற செலவுகளுக்கு என்ன செய்வது? கிராமத்தில் குடிநீர் குழாய்களுக்கு மேலாக குடிநீர் விற்கும் தண்ணீர் வண்டிகள் அதிகமாகி விட்டன என்றே தோன்றுகிறது. ஏனெனில் குடிநீர் குழாய்களின் செயல்பாடுகள் கேள்விக்குறியான விஷயமாகவே உள்ளது. செழிப்பான ஒரு கிராமத்தில் இருந்து கொண்டு குடிநீர் தேவைக்கும் மற்ற நீர் தேவைக்கும் அல்லல்படுவது எங்களுக்கு வேதனையாக உள்ளது” என்று வருத்தம் தெரிவிக்கின்றனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

மேலும் இந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பல வருடங்களாகச் சுற்றியுள்ள சாக்கடை திறந்த வெளியில் உள்ளது. பள்ளிக்கு மிக அருகில் அபாயகரமான நிலையில் பராமரிக்கப்படாத குளம் உள்ளது. பல வருடங்களுக்கு முன்பு ஒரு குழந்தை இதில் இறந்தது குறிப்பிடத்தக்கது. முக்கிய நீர்நிலை ஆதாரமாக இருந்த இந்த குளம் இன்று மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஐந்து முதல் பத்து வயது வரை படிக்கும் குழந்தைகள் உள்ள பள்ளியில் அவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமான ஒன்று.

இது குறித்து தர்மத்துப்பட்டி ஊராட்சி தலைவர் மருதமுத்துவை தொடர்பு கொண்டு பேசியபோது, “நான் இன்னும் 60 நாள்களில் பணி ஓய்வு பெறப் போகிறேன். ஊராட்சியில் அதிகாரிகளுக்கு இடையே பல வேறுபாடுகளும் பிரச்னைகளும் உள்ளது. முன்னெடுக்கிற செயல்களை தடுக்கிறார்கள். இது குறித்து பி.டி.ஒ அவர்களிடம்தான் பேச வேண்டும்” என்று கூறினார். அவரிடம் தொலைபேசி எண்ணை வாங்கி, பி.டி.ஒ மலரவனைத் தொடர்பு கொண்டபோது, “குழாய் இணைப்பு போடும் பணி செயல்பாட்டில் உள்ளது. மேலும் இந்த புகார்கள் குறித்து அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். ஒரு சில நாள்களில் ஆய்வு மேற்கொள்வோம்” என்றார்.

நீலகிரி: தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்த சிறுத்தை; காரணத்தைக் கண்டறிய களமிறங்கிய வனத்துறை!



.

Previous Post

முதல் நாள் பார்வையாளர்களை நியமித்த காங்கிரஸ்!

Next Post

Junior Vikatan – 27 November 2024 – ஒன் பை டூ | discussion about edappadi palanisamy comments about udhayanidhi

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Junior Vikatan – 27 November 2024 – ஒன் பை டூ | discussion about edappadi palanisamy comments about udhayanidhi

Junior Vikatan - 27 November 2024 - ஒன் பை டூ | discussion about edappadi palanisamy comments about udhayanidhi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In