Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கேவலமான பிரிவினைவாத பேச்சை பிரதமர் முதல் பாஜகவினர் அனைவரும் கைவிட வேண்டும் : ஸ்டாலின்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 19, 2024
in Default
0
கேவலமான பிரிவினைவாத பேச்சை பிரதமர் முதல் பாஜகவினர் அனைவரும் கைவிட வேண்டும் : ஸ்டாலின்.
9
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தமிழர்களைத் தொடர்புபடுத்திப் பேசிய மத்திய அமைச்சர் ஷோபனாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய அமைச்சர் ஷோபனாவின் வெறுப்புப் பேச்சு தேர்தல் நடத்தை விதிகளை மீறியது என்றும் தேர்தல் ஆணையம் உடனடியாக அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

.”மத்திய பாஜக அமைச்சர் ஷோபாவின் பொறுப்பற்ற கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். இது போன்ற கருத்துகளை முன்வைப்பவர் NIA அதிகாரியாக இருக்க வேண்டும் அல்லது ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் நெருங்கிய தொடர்புடையவராக இருக்க வேண்டும். அப்படி இல்லாதபோது இத்தகைய கூற்றுகளை முன்வைக்க அவருக்கு அதிகாரம் இல்லை. பாஜகவின் இந்த பிளவுபடுத்தும் பேச்சை தமிழ் மற்றும் கன்னட மக்கள் ஏற்கமாட்டார்கள்” என்று முதல்வர் கூறியுள்ளார்.

அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஷோபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.பிரதமர் முதல் கட்சியின் தொண்டர் வரை, பாஜகவில் உள்ள அனைவரும் இந்த கேவலமான பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் முதல்வர் விமர்சித்துள்ளார்.

இந்த வெறுப்புப் பேச்சை தலைமைத் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு உடனடியாக கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.பெங்களூரு ராமேஸ்வரம் கபேயில் குண்டுவைத்தது தமிழர்தான் என்று அமைச்சார் ஷோபா கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதன் எதிரொலியாக முதல்வரின் கண்டனம் வெளியாகி இருக்கிறது.அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, “தமிழகத்தில் இருந்து வருபவர்கள் இங்கு (கர்நாடகா) வந்து பயிற்சி பெற்று இங்கு வெடிகுண்டுகளை வைக்கிறார்கள். அப்படித்தான் பெங்களூரு ஓட்டலில் வெடிகுண்டு வைக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

Previous Post

தமிழர்களை தீவிரவாதிகள் போல சித்தரிக்கும் பாஜக அமைச்சரின் பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

Next Post

பா.ஜ.,வில் இணைந்தார் முன்னாள் தூதரக அதிகாரி.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பா.ஜ.,வில் இணைந்தார் முன்னாள் தூதரக அதிகாரி.

பா.ஜ.,வில் இணைந்தார் முன்னாள் தூதரக அதிகாரி.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In