Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அகிலஇந்திய வேலைநிறுத்த போராட்டம் திருப்பூரில் எதிரொலி..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 17, 2024
in Default
0
அகிலஇந்திய வேலைநிறுத்த போராட்டம் திருப்பூரில் எதிரொலி..
14
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கோரிக்கைகளும் கோஷங்களும் :இந்தியா ஒரு வேளாண்மை நாடு. 60% மக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விவசாயத்தை சார்ந்து இருக்கிறார்கள். 2014 முதல் 2022 வரை 1,00,474 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்றவியல் புள்ளி விபர அமைப்பு தெரிவிக்கிறது. அதாவது, மோடி ஆட்சியில் சராசரி நாள் ஒன்றுக்கு 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். (ஆதாரம்-தி ஒயர்-18.12.23)

2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என பாஜக வாக்குறுதி கொடுத்தது. ஆனால் 2012-13க்கும் 2018- 19க்கும் இடையில் உண்மையான வருமானம் 1.4% குறைந்துள்ளது. எல்லா விவசாயிகளுக்கும் ரூபாய் ஒரு லட்சம் வட்டி இல்லா கடன் தரப்படும் என மோடி தேர்தல் வாக்குறுதி கொடுத்தார். அது நிறைவேற்றப்படவில்லை. விவசாய பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக தனி ரயில்வே இணைப்பு ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை இப்போது பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டுள்ள வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் பரிந்துரைப்படி, உற்பத்திச் செலவு + 50% என கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. குறைந்தபட்ச விலை முறையாக நிர்ணயிக்கப்படாததால் 2000 முதல் 2007 வரை மட்டும் ரூ.45 லட்சம் கோடி இழப்பு என ஓர் அறிக்கை (OCED-ICAIR) தெரிவிக்கிறது. இந்தியா உலக வறுமை குறியீட்டில் 125 நாடுகளில் 111-ம் இடத்தை எட்டி விட்டது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு உடனே சம்பளம் கொடுக்காமல் ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது. ஆதார் இணைப்பால் பலர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் திட்டத்தை சீர்குலைக்கிறது அரசு.

வேலையின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்ற வாக்குறுதி காணாமல் போய்விட்டது. இந்தியா முழுவதும் நீர்ப் பாசன வசதி செய்யப்படும் என்ற தொழிலாளர்கள் நல சட்டங்கள் திருத்தப்பட்டு தொழிலாளர்களின் உறுதியும் நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.3லட்சம் கோடி வருவாயை இழப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சிறு-குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டு தொழிலாளர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது.

அரசாங்கத்தில் பல லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. குத்தகை பணியாளர்களை நியமித்து இடஒதுக்கீட்டை செல்லா காசாக்கி வருகிறது பா.ஜ.க அரசு. குறைந்தபட்ச ஊதியம் அமலாக்கப்படவில்லை. தொழிலாளர்கள் அன்றாடங் காய்ச்சிகளாக தவிக்கின்றனர்.

மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத கொள்கைகளை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் இருக்கக்கூடிய உழைப்பாளி மக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைத்து மக்களும் கடும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், மக்கள் சொத்தை தனியாருக்கு விற்பது என்ற வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்திய உழைப்பாளி மக்கள் இந்த கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர் 2024 பிப்ரவரி 16 அன்று நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தை நடத்துவது என்று அனைத்து தொழிற்சங்க, ஜனநாயக அமைப்புகளும் முடிவு செய்துள்ளது.

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்து!

ஒப்பந்த, தினக்கூலி, அவுட்சோர்சிங் முறையை கைவிடுக!

அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் நிரந்தர ஊழியர்களை பணியமர்த்து!

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்காதே !

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து! புதிய கல்விக் கொள்கையை கைவிடுக என்று !

ஜனவரி 13 அன்று நடைபெற்ற அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன தேசிய செயற்குழு அனைத்து மாநிலங்களிலும் இந்த வேலை நிறுத்தத்தை அரசு ஊழியர்கள் பங்கேற்று வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ போராட்டங்கள் தொடர்ந்து இருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு 16/02/2024ல் மாலை நேர தர்ணா போராட்டத்தை நடத்திட முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில்

அகில இந்திய வேலை நிறுத்தம்

நாள்: 16.02.2024 வெள்ளிக்கிழமை

இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு , திருப்பூர் .

தலைமை.A.ராணி மாவ‌ட்ட தலைவர்

விளக்கவுரை.மா.பாலசுப்பிரமணியன் மாவ‌ட்ட செயலாளர்

மாலை நேர தர்ணா போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பென்கள் 20 பேர் ஆண்கள் 40 மொத்தம் 60 தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

Previous Post

‘க்’ சேர்க்க உத்தரவிட்ட விஜய்..!

Next Post

ஏர் இந்தியாவிற்கு ஷோகாஸ் நோட்டீஸ் – சக்கர நாற்காலி இல்லாமை.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஏர் இந்தியாவிற்கு ஷோகாஸ் நோட்டீஸ் – சக்கர நாற்காலி இல்லாமை.

ஏர் இந்தியாவிற்கு ஷோகாஸ் நோட்டீஸ் - சக்கர நாற்காலி இல்லாமை.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In