போபால்: மத்திய பிரதேசத்தில் 90 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மத்தியபிரதேச மாநிலம் நிவாரி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: இன்று வரை அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளதால், மத்திய பிரதேச மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள்.
மத்திய பிரதேசத்தில் 90 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இந்த முறை மக்கள் சமாஜ்வாதிக்கு ஓட்டளித்து தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

